Smuggling liquor: ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தினால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - எஸ்பி செந்தில்குமார் எச்சரிக்கை
ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தினால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - திருச்சி ரயில்வே காவல் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் எச்சரிக்கை
விழுப்புரம்: ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தினால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என திருச்சி ரயில்வே காவல் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே காவல் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் திடீரென புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு செல்லும் ரயிலில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட உயர்ரக 62 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த எஸ்பி செந்தில்குமார், புதுச்சேரியிலிருந்து ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயிலில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு மதுகடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கூறினார்.
மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 168 கிலோ ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்படுள்ளதாகவும், கஞ்சா கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தினால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எஸ் பி செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் இருந்தால் உடனடியாக பயணிகளின் பாதுகாப்பினை காக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்