மேலும் அறிய
மழையில் இடிந்து விழுந்தது ஸ்மார்ட் சிட்டி ‛சுவர்’
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் கட்டப்பட்ட சுவர், மழைக்கு இடிந்து விழுந்த சம்பவம் அதன் தரம் மீது கேள்வி எழுப்பியுள்ளது.

SMART_CITY_WORK_(2)
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரியகுளம்கரை அசோக் நகர் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுமார் 12 அடி உயரத்தில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையை தாங்க முடியாமல் 12 அடி உயர தடுப்புச் சுவர், சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் சுவர் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‛சுவர் அமைக்கும் பணி முடிந்து 6 மாதமே ஆகியுள்ளது. தற்போது சுவர் இடிந்து விழுந்து இருப்பது கட்டுமான பணியின் தரம் மீது சந்தேகத்தை எழுப்புவதாக,’ குற்றம்சாட்டிய அவர்கள், சுவரின் தரம் குறித்து விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
க்ரைம்
க்ரைம்
ஆட்டோ





















