மேலும் அறிய

Sharmika Saran: நிபுணர்கள் குழு முன்பு ஆஜரான ஷர்மிகா; விசாரணையில் நடந்தது என்ன தெரியுமா..?

Sharmika Saran: சித்த மருத்துவர் ஷ்ர்மிகாவின் பதில் திருப்தி அளிக்காததால் வல்லுநர் குழு அவரிடம் எழுத்து பூர்வமாக விளக்கம் கேட்டுள்ளது.

Sharmika Saran: சித்த மருத்துவர் ஷர்மிகாவின் பதில் திருப்தி அளிக்காததால் வல்லுநர் குழு அவரிடம் எழுத்து பூர்வமாக விளக்கம் கேட்டுள்ளது. 

ஷர்மிகா:

இணையத்தில் தனது வீடியோ பதிவுகள் மூலம் சித்த மருத்துவர் ஷர்மிகா தவறான தகவல்களை பரப்புவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி எழுந்த புகாரின் அடிப்படையில், நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என  இந்திய மருத்துவ இயக்குனரகம் மற்றும் ஓமியோபதி வாரியம் தெரிவித்தது. இதையடுத்து இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டது. மேலும் அந்த நோட்டீஸில் ஜனவரி மாதம் 24ஆம் தேதி நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. 

சர்ச்சை பேச்சு:

குழந்தை பிறப்பு, கர்ப்பம், உடல் எடை அதிகரித்தல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் ஷர்மிகா கூறிய கருத்துகள் சர்ச்சையானது. மேலும், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது, நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரியதாகும், குலோப் ஜாமூன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை அதிகரிக்கும் போன்ற கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சித்த மருத்துவர் என்ற பெயரில் வாய்க்கு வந்ததை ஷர்மிகா உளறுவதாக இணையதளத்தில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து சித்த மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர்.  புகாரை அடுத்து சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் என அனுப்பப்பட்டதாக இந்திய மருத்துவம், ஹோமியோபதி வாரியம் இணை இயக்குனர்  பார்த்திபன் கூறியிருந்தார். 

வல்லுநர் குழு முன்னர் ஆஜர்

நோட்டீஸின் அடிப்படையில் இன்று வல்லுநர் குழு முன்னர் ஆஜரான சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விளக்கம் கேட்கப்பட்டது. விளக்கம் அளிக்கப்பட்டதுக்கு பின்னர் வெளியே வந்த சித்த மருத்துவர் ஷர்மிகாவை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, அவர் அதற்கு எந்த விதமான பதிலும் சொல்லாமல் பத்திரிகையாளர்களை தவிர்த்துவிட்டுச் அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றார். 

விளக்கம் கேட்ட வல்லுநர் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "சித்த மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக சித்த மருத்துவர் பேசியது குறித்த பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது, குளோப் ஜாமுன் உட்கொண்டால், ஒரேநாளில் மூன்று கிலோ எடை அதிகரிக்கும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரியதாகும் என அவர் கூறிய  இந்த முக்கியமான கருத்துக்கள் மூன்று கேள்விகளை மையப்படுத்திதான் வல்லுநர் குழு கேட்டோம். அதற்கு, ஷர்மிகா விளக்கமளித்தார், அவரது விளக்கம் திருப்தியளிக்காததால் எழுத்து வழியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
மலைகளின் ரகசிய அழகை ரசிக்கணுமா? ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பா போக வேண்டிய 5 இடங்கள்!
மலைகளின் ரகசிய அழகை ரசிக்கணுமா? ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பா போக வேண்டிய 5 இடங்கள்!
ஊழியர்களுக்கு புதிய பணி நேரம், விடுமுறை மாற்றம்.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி - எதற்காக தெரியுமா.?
ஊழியர்களுக்கு புதிய பணி நேரம், விடுமுறை மாற்றம்.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி - எதற்காக தெரியுமா.?
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Embed widget