மேலும் அறிய
Advertisement
வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அம்சம் என்ன? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்..
விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு தேவையான அம்சங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும். கரும்பு அறுவடைக்கான புதிய தொழில்நுட்பங்கள் பட்ஜட்டில் அறிவிக்கப்படும்" என உழவர் நலத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்
வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தின் இடையே உழவர் நலத்துறை அமைச்சர் பேட்டி. வரும் 14-ஆம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் தனி நிலை அறிக்கை தொடர்பாக விவசாய அமைப்புகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சேப்பாக்கம் வேளாண்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வேளாண் துறை சிறப்பு செயலாளர் ஆபிரகாம், மாநில வளர்ச்சிக் கொள்கை குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர்கள், கட்சி மற்றும் கட்சி சார்பற்ற விவசாய சங்க பிரதிநிதிகள், ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம்,
தமிழகத்தில் 48,000 வாகனத்தில் கொரோனா காலகட்டத்தில் விவசாய விளைபொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேளாண் ஏற்றுமதி தொடர்பாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும்,வேளாண் சட்டம் எதிர்ப்பு தொடர்பாக திமுக அரசு உறுதியாக இருக்கிறது என்றார். கரும்பு சாகுபடியில் வெட்டுக்கூலி , கூலியாள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனை இருக்கிறது. எனவே கரும்பு அறுவடையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பான அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
கரும்பு விவசாயிகளுக்கு 1200 கோடி தொகை நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை பிரச்சனையில் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கலான பிறகு நலிவுற்ற தனியார் கரும்பு ஆலைகளுடன் அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தை மூலம் நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் " என்று கூறினார்.
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion