மேலும் அறிய

Seeman: மாணவியின் உள்ளாடையை கழட்டச் சொல்வதா? மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்...! சீமான் ஆவேசம்...!

மாணவியின் உள்ளாடையைக் கழட்ட கட்டாயப்படுத்திய மயிலாப்பூர் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Seeman : மாணவியின் உள்ளாடையைக் கழட்ட கட்டாயப்படுத்திய மயிலாப்பூர் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"சென்னை, மயிலாப்பூர் 'நீட்' தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டுமாறு தேர்வு கண்காணிப்பாளர் கட்டாயப்படுத்தியது வன்மையான கண்டனத்துக்குரியது. 'நீட்' என்னும் உயிர்க்கொல்லி தேர்வில், சோதனை என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகளைப் பறிப்பது கொடுமையின் உச்சமாகும்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் திணிக்கப்பட்ட கொடும் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைக்கப்பட்டுக் கானல் நீராகியது. தமிழ்நாட்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பின்பும், நீட் தேர்வை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துவருவது கொடுங்கோன்மையாகும்.

நீட் தேர்வு தோல்வி, தேர்வு பயம், பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்கள் அளிக்கும் அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமைகள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், தற்போது சோதனை என்ற பெயரில் காதணி முதல் உள்ளாடைகள் வரை அகற்றச்சொல்வது மேலும் அவர்களை மனவுளைச்சலுக்கு ஆளாக்கவே கூடும்.

இதனால் உருவாகும் பதற்றமான சூழலால் தேர்வில் முழுக் கவனம் செலுத்தமுடியாத நெருக்கடியும் ஏற்படும். இது நீட் தேர்வுத் தோல்விகளும், தற்கொலைகளும் அதிகரிக்கவே வழிவகுக்கும். மாணாக்கர்களைப் பயங்கரவாதிகளைப் போல சோதனை செய்து, உள்ளாடைகள் வரை அகற்றச்சொல்வது சிறிதும் மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலாகும். அதிலும் மற்ற மாநிலத்தில் இல்லாத நடைமுறையாக தமிழகத்தில் மட்டும் இவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்குப் பின்னால் தமிழ்ப் பிள்ளைகள் மருத்துவராவதைத் தடுக்க, திட்டமிட்டு வேலை செய்வதாகக் கருத வேண்டியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த முதல் சட்டமன்றத் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதியளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை அடைந்த திமுக, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் நீட் தேர்வை இன்றுவரை ரத்து செய்யவில்லையே ஏன்? நீட் கொடுமைக்கு முதல் பலியான அன்புத்தங்கை அனிதாவின் பெயரில் அரியலூர் மருத்துவக்கல்லூரியில் ஒரு அரங்கம் உருவாக்கியுள்ள திமுக அரசு, மருத்துவக் கனவுகள் சிதையும் அனிதாக்கள் உருவாகாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

சூடு, சொரணை இருந்தால் நீட் தேர்வினை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று கடந்த ஆட்சிக்காலத்தில் கருத்துக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இரண்டாண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படாதது குறித்து என்ன கருத்துக் கூறப்போகிறார்? இதுதான் இரண்டு ஆண்டில் இந்தியத் துணைக்கண்டம் வியக்கும் திராவிட மாடல் அரசின் சாதனையா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, திமுக அரசால் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்திற்குள் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நீட் தேர்வின் பெயரால் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுவதையாவது தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாணவியின் உள்ளாடையைக் கழட்ட கட்டாயப்படுத்திய மயிலாப்பூர் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வுக்கு எதிரான வழக்கினை விரைவுபடுத்த உரிய சட்டப்போராட்டதை முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Embed widget