Schools Colleges Holiday: தொடர் கனமழை - 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
சென்னையில் விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், சென்னைவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கனமழை காரணமாக தமிழ்நாட்டின் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளாது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்றுமுன் தினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று எதிர்பார்த்த நிலையில், காற்று உந்துதல் காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவில்லை. ஆனாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என்று அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.
#BREAKING | புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை https://t.co/wupaoCQKa2 | #TNRains | #Rains | #Pudukkottai pic.twitter.com/oxLqla6RLx
— ABP Nadu (@abpnadu) November 26, 2021
#BREAKING | நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை https://t.co/wupaoCQKa2 | #TNRains | #TNSchools | #Thirunelveli pic.twitter.com/V2L55d16Ac
— ABP Nadu (@abpnadu) November 26, 2021
தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களிலும் சாலைகளில் தண்ணீர் வெள்ளபோல சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், சென்னைவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்