மேலும் அறிய

School Leave: ராமநாதபுரத்தில் தொடரும் மழை.. பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்..

ராமநாதபுரத்தில் தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை நீடிக்கும் காரக்அன்ன்ணத்தால் இன்று ஒரு நாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பை வெளியிட்டார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன். 

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. அதனை தொடர்ந்து நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதலில் மழை தீவிரமாக இல்லாத நிலையில் கடந்த வாரம் முதல் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இருப்பினும் அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் தற்போது வரை வட கிழக்கு பருவ மழை இயல்பை விட குறைவாகவே பதிவாகியுள்ளது. அதாவது 39% குறைவாக பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: (மில்லிமீட்டரில்)

நாகப்பட்டினம் 53.0, ஈரோடு 36.0, கரூர் பரமத்தி 27.0, நுங்கம்பாக்கம் (சென்னை) 23.0, காரைக்கால் 16.0, கொடைக்கானல் (திண்டுக்கல்) 15.0, மதுரை 15.0, திருச்சிராப்பள்ளி 15.0, தர்மபுரி 12.0, சிதம்பரம் (கடலூர்) 26.5, விருதுநகர் 23.0, திருச்செந்தூர் (தூத்துக்குடி) 21.0, ராமநாதபுரம் 42.0, அருப்புக்கோட்டை (விருதுநகர்) 12.5, பூந்தமல்லி  (திருவள்ளூர்) 21.5, நந்தனம் (சென்னை) 20.0, வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 11.0, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 9.5, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 9.5 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.   

அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை நிலவரம்: 

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிபேட், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Rain Alert: அலுவலகம் செல்லும் மக்களே! காலை 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?

 

தலைப்பு செய்திகள்

100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget