மேலும் அறிய

Scholorship: அரசு சார்பில் பி.சி., எம்.பி.சி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை; புதுப்பிக்க நாளை மறுநாள் கடைசி..!

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்பிசி) மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறும் விண்ணப்பங்களைப் புதுப்பிக்க நாளை மறுநாள் கடைசித் தேதி ஆகும். 

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்.பி.சி.) மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறும் விண்ணப்பங்களைப் புதுப்பிக்க நாளை மறுநாள் கடைசித் தேதி ஆகும். 

கல்வி உதவித்தொகை:

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவிகளுக்கு இலவசக் கல்வித் திட்டம் என்ற பெயரில் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல முதுகலை, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல்  உள்ளிட்ட தொழில் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 

இதன்மூலம் கல்விக் கட்டணம் முழுமையாக அரசால் வழங்கப்படும். அதேபோல புத்தகக் கட்டணம், தேர்வுக் கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவையும் வழங்கப்படும். 

என்ன தகுதி?

சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, கல்வி உதவித்தொகைக்கு 2022- 2023 ஆம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையோ அணுகலாம். 

மேலும், http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschems என்ற இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Scholorship: அரசு சார்பில் பி.சி., எம்.பி.சி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை; புதுப்பிக்க நாளை மறுநாள் கடைசி..!

கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, ‘

ஆணையர், 
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், 
எழிலகம், இணைப்பு கட்டடம், 2 வது தளம், 
சேப்பாக்கம், சென்னை-5, 
தொலைபேசி எண்: 44-28551462’ 

என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

கடைசித் தேதி: புதிதாக விண்ணப்பிக்க 2023 ஜனவரி 30-ம் தேதி கடைசித் தேதி ஆகும். 

அதேபோல, ஏற்கெனவே விண்ணப்பித்து புதுப்பிக்க விரும்புவோருக்கு நாளை மறுநாள் (டிசம்பர் 6) கடைசித் தேதி ஆகும். 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணைய முகவரியைக் காண வேண்டும். 

தொலைபேசி எண்: 044-28551462      
இ-மெயில்: tngovtiitscholarship@gmail.com

அதேபோல, பிற மாவட்டங்களில் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
"ஈரான் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்துங்க" ஐடியா கொடுத்த டிரம்ப்.. பேரழிவை நோக்கி இஸ்ரேல்?
இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை
இசிஆரில் கொடூரம்.... தோழி உயிரை காவு வாங்கிய பேருந்து... பயத்தில் இளைஞர் தற்கொலை
சாம்சங் தொழிலாளர்களுக்காக களத்தில் குதித்த கம்யூனிஸ்டுகள்.. கைது செய்த காவல்துறை!
சாம்சங் தொழிலாளர்களுக்காக களத்தில் குதித்த கம்யூனிஸ்டுகள்.. கைது செய்த காவல்துறை!
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
Embed widget