Beef Briyani Issue: அரசு சார்பில் நடைபெறும் திருவிழாக்களில் பாகுபாடு காட்ட கூடாது என ஆதிதிராவிட ஆணையம் அதிரடி உத்தரவு
அரசு சார்பில் நடைபெறும் திருவிழாக்களில் பாகுபாடு காட்ட கூடாது என ஆதிதிராவிட ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பாகுபாடும் காட்ட கூடாது:
மாவட்ட அரசு சார்பில் நடைபெறும் திருவிழாக்களில், எவ்வித பாகுபாடும் காட்ட கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவில், மாட்டிறைச்சிக்கு பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்பூர் பிரியாணி திருவிழா:
தமிழ்நாட்டில் முதன் முறையாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் மே 13,14,15 ஆகிய மூன்று நாட்களில், ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022* (20-க்கு மேற்பட்ட பிரியாணி வகைகள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட அரங்குகள்) நடைபெறும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திட்ட இயக்குநர் துணை ஆட்சியர். வட்டாட்சியர், நகர மன்றத் தலைவர்கள் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர் அப்பொழுது பேசிய மாவட்ட ஆட்சிய திரு அமர்குஷ்வாஹா, ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் "பீப் பிரியாணி தவிர அனைத்து வகையான பிரியாணி வகைகளும் கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் ஏன் பீப் பிரியாணி தவிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.
மேற்கண்ட செய்திக் குறிப்பையும் விளம்பரத்தையும் கண்ட ஆம்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகள், இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கடைப்பிடிக்கப்படும் உணவுத் தீண்டாமை என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு மட்டுமின்றி ஒருவேளை அப்படி நடந்தால் தாங்கள் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவுக்கு எதிரிலேயே பீப் பிரியாணி கடைகளை நடத்துே என்றும் அறிவித்தனர்.
புகார்:
இந்நிலையில் விடுதலைக் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சி. ஓம்பிரகாசம் என்பவர, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழ குடியினர் நில ஆணையத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்களின் முக்கிய உணவாகிய மாட்டிறைச்சியை அரசு நடத்தும் விழாவில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் மீது உணவுத் தீண்டாமையை அதிகாரிகள் நிகழ்த்துகின்றனர். மட்டன் மற்றும் சிக்கன் சாப்பிடாத பீப் மட்டுமே சாப்பிடக்கூடிய எங்களைப் போன்றவர்கள் அவ்விழாவில் பங்கேற்க முடியாத சூழலை, தீண்டாமையை ஒழிக்க வேண்டிய அரசு அதிகாரிகளே உருவாக்குகிறார்கள் இது எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட உளவியல் ரீதியான வன்முறையாகவே நாங்கள் உணர்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரைப் பரிசீலித்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், அரசின் மாவட்ட நிர்வாகம் நடத்துகின்ற 20 வகையான பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை மட்டும் புறக்கணித்து இருப்பது. அங்கு வசிக்கும் ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான அதிகாரப்பூர்வமான பாகுபாடாகும். இதற்கு ஏன் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று விளக்கம் கேட்டு ஓர் அறிவிக்கையை 12.05.2022 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியது.
ஆணையம் உத்தரவு:
இந்நிலையில், மாவட்ட அரசு சார்பில் நடைபெறும் திருவிழாக்களில், எவ்வித பாகுபாடும் காட்ட கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவில், மாட்டிறைச்சிக்கு பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற பாகுபாடுக்கு வழிகாட்ட கூடாது என்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.