Savukku Shankar Bail Case: சென்னை காவல்துறை பதிவுசெய்த 4 வழக்குகளில், சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை பதிவு செய்த 4 வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை பதிவு செய்த 4 வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 4 வழக்குகள் குறித்து ஊடகங்களில் விவாதிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் 15ம் தேதி தீர்ப்பளித்தது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை நிர்வாக காரணங்களுக்காக என்று கூறி நள்ளிரவில் கடலூர் சிறைக்கு அவரை மாற்றினர். ஜாமீன் கேட்டும், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் சவுக்கு சங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை கடந்த 11ம் தேதி விசாரணை செய்த உச்சநீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு வருவதற்கு முதல்நாளே மேலும் 4 வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் கைது செய்தனர். இது பழிவாங்கும் செயல் என்று தமிழ்நாடு அரசை பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டித்திருந்தனர்.
இந்த நிலையில், 4 வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, 15 நாள்கள் க்ரைம் ப்ரான்ச் காவல்நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும். சொந்த பிணையில் வெளியே செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், சிறையில் இருந்து நாளை வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Crime: டியூசன் சென்று திரும்புகையில் பாலியல் அத்துமீறல்... ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி!
முன்னதாக, நீதித்துறை குறித்து 'யூடியூப்' சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து கடலூர் மத்திய சிறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது.
கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் மீண்டும் உண்ணாவிரதம்
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மதுரை சிறையிலிருந்து அவர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
நிர்வாகக் காரணங்கள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக சிறைத் துறை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.