மேலும் அறிய

என் மகள் திருமணத்திற்கு ரூ.800 கோடி செலவு செய்தேனா..? - சரத்குமார்

தெரு தெருவாக சைக்கிளில் பேப்பர் பேட்டவன்தான் சரத்குமார்.மக்களால் உயர்த்தப்பட்டு சுப்ரீம் ஸ்டாராக இருக்கேன்.

விழுப்புரம்: தெரு தெருவாக சைக்கிளில் பேப்பர் பேட்டவன் தான் சரத்குமார், மக்களால் உயர்த்தப்பட்டு சுப்ரீம் ஸ்டாராக இருக்கேன். என் மகள் திருமணத்திற்கு ரூ.800 கோடி செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள், அது எங்க இருக்கிறது என்று எனக்கு தெரியாது, என்னை இப்போ விட்டா கூட மூட்டை தூக்கி பிழைப்பேன் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பாஜகவை சார்ந்த நடிகர் சரத்குமார் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் எதிரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாகன பிரச்சார வாகனத்தில் பேசிய நடிகர் சரத்குமார் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்துள்ளார் என்றால், அது நல்லாட்சியை காட்டுகிறது. விக்கிரவாண்டி தொகுதி எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை உள்ளதாகவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என திமுகவினர் உள்ளனர்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்த தான் காலத்தின் கட்டாயத்தினால் வல்லரசு நாடாக இந்தியா முன்னேற்ற வேண்டும் என்பதால் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தேன். தமிழகத்தில் பலரும் கட்சிகள் நடத்தி வருகிறார்கள் பிறருக்கு துதி பாடும் நிலையில் தான் அவர்கள் உள்ளார்கள். அரசுக்கு தெரியாமல் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து இருக்க முடியாது, தமிழகத்தில் பல இடங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மகன் தாயை கொல்கிறான், தந்தை மகனை கொல்கிறான், இந்த நிலையில்தான் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஒரு எம்பி இல்லை என்றாலும் கூட பிரதமர் பல சீரிய திட்டங்களை தமிழகத்திற்கு பலகோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார், மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். "தெரு தெருவாக சைக்கிளில் பேப்பர் பேட்டவன் தான் நான் மக்களால் உயர்த்தப்பட்டவன்" தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என தெரிவித்தார்.

சரத்குமார் தனது மகள் திருமணத்திற்கு ரூ.800 கோடி செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள். அது எங்க இருக்கிறது என்று எனக்கு தெரியாது, என்னை இப்போ விட்டா கூட மூட்டை தூக்கி பிழைப்பேன் என்றும் நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளதால் தான் இன்றும் திடமாக உள்ளதாக கூறினார். பகுஜன் சமாஜ் வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எப்படிபட்ட ஆட்சி நடக்கிறது என்பதை மக்கள் பார்க்க வேண்டும் ஆட்சியும் காட்சியும் மாற வேண்டும் இரு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன.

மக்களுக்காக சேவை செய்யும் வேட்பாளர் தான் பாமக வேட்பாளர் சி. அன்புமணி உள்ளதாகவும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் இரண்டு நாட்களில் அது காணாமல் போய்விடும் என்றும் அதிமுக வாக்காளார்கள் கூட்டணியில் இல்லாவிட்டாலும் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும். இலவசமாக பேருந்து பயணம் என்று கூறிவிட்டு ஓசியில செல்வதாக அமைச்சர் பொன்முடி தெரிவிக்கிறார். இலவச பேருந்து பயணம் என்ற பெயரில் ஏளனம் செய்து கொண்டிருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK-TVK Alliance?: விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Grammys Awards 2025 winners: விண்ணைமுட்டிய இசை கொண்டாட்டம் - 67வது கிராமி விருதுகள், வெற்றியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!
Grammys Awards 2025 winners: விண்ணைமுட்டிய இசை கொண்டாட்டம் - 67வது கிராமி விருதுகள், வெற்றியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!
Radhakrishnan IAS: பெரிய மனுஷன் சார் நீங்க..! சுனாமியால் கிடைத்த மகள் - தடபுடல் திருமணம், ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து
Radhakrishnan IAS: பெரிய மனுஷன் சார் நீங்க..! சுனாமியால் கிடைத்த மகள் - தடபுடல் திருமணம், ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்Vetrimaaran in TVK Function | தவெக-வில் இணையும் வெற்றிமாறன்?சம்பவம் செய்த தொண்டர்கள்! இது நம்ம LIST-லயே இல்லயேஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK-TVK Alliance?: விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Grammys Awards 2025 winners: விண்ணைமுட்டிய இசை கொண்டாட்டம் - 67வது கிராமி விருதுகள், வெற்றியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!
Grammys Awards 2025 winners: விண்ணைமுட்டிய இசை கொண்டாட்டம் - 67வது கிராமி விருதுகள், வெற்றியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!
Radhakrishnan IAS: பெரிய மனுஷன் சார் நீங்க..! சுனாமியால் கிடைத்த மகள் - தடபுடல் திருமணம், ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து
Radhakrishnan IAS: பெரிய மனுஷன் சார் நீங்க..! சுனாமியால் கிடைத்த மகள் - தடபுடல் திருமணம், ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
"சோலியை முடிச்ச சோலி கே பாட்டு" மேடையிலே நின்ற கல்யாணம் - மனம் உடைந்த மாப்பிள்ளை!
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
Embed widget