சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
சரத்குமார் மீண்டும் சமத்து மக்கள் கட்சியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரத்குமார் பாஜகவில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியான நிலையில், மீண்டும் சமத்து மக்கள் கட்சியை தொடங்க ஆதரவாளர்கள் வலியுறுத்துவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்குமார், “30 ஆண்டுகளாக என்னுடன் பயணித்தவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். ஆதங்கம் என்ன என்பதை எனது ஆதரவாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதுவரை ஏன் இன்னும் பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் எனது ஆதரவாளர்களுக்கு இருக்கிறது. பொறுப்பு இருந்தால்தான் என்னாலும் செயல்பட முடியும், இதை வேதனையாக சொல்லவில்லை ஆதங்கமாக சொல்கிறேன். ஏன் நீங்கள் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கக்கூடாது என்று கூட எனது ஆதரவாளர்கள் கூறினார்கள். கேட்டதில் நான்கில் ஒரு பங்கு நிர்வாகிகளுக்கு மட்டுமே பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். எந்த பொறுப்பு இல்லாமல் எப்படி தேர்தல் பணியாற்றுவது என ஆதரவாளர்கள் கூறினர். பாஜகவில் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரம் கேட்போம். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக தலைமைக்கு கடிதம் எழுத உள்ளேன். பாஜகவின் மேடைகளில் எனது புகைப்படத்தை கூட வைக்காததால் ஆதரவாளர்கள் ஆதங்கத்தில் இருக்கின்றனர். கட்சி இணைப்பின்போது பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனது அதிருப்தியை பாஜக தலைமையிடம் தெரிவித்துள்ளேன்” என்றார்.
அஇசமக கட்சி நடத்தி வந்த சரத்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தனது கட்சியை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் தனது ஆதரவாளர்களுடன் சரத்குமார் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு பேட்டியளித்த அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















