மேலும் அறிய

Yercaud Walkathon: "ஏற்காடு எங்கள் பெருமை" : சேலத்தில் நடந்த விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி

சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக "ஏற்காடு எங்கள் பெருமை" விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணத்தை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் இல்லா ஏற்காட்டை உருவாக்கும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஏழைகளின் ஊட்டி என்று பொதுமக்களால் அன்போடு அழைக்கப்படும் ஏற்காடு தற்போது பிளாஸ்டிக் கழிவுகளால் தனது அழகை இழந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு சுற்றுலா தளம் அமைந்துள்ளது. தமிழகத்தின் தவிர்க்க முடியாத சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு தமிழக மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

Yercaud Walkathon:

ஏற்காடு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திவிட்டு மலை பகுதியில் எரிந்து செல்கின்றனர். இதனால் ஏற்காடு அழகு குறைந்து சுகாதாரமற்ற முறையில் காட்சியளிக்கிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களால் வனப்பகுதிகள், வன உயிரினங்கள், மரங்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. ஏற்காடு அடிவாரத்தில் இருந்து தொடங்கிய நடைபயணமானது 60 அடி பாலம் அருகே நிறைவு பெற்றது. சுமார் 14 கிலோமீட்டர் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடை பயணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Yercaud Walkathon:

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேசியபோது, "தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள "ஏற்காடு" ஒரு சிறந்த மலைவாழ் இடம். இது சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் பிரதேசமாக அமைந்துள்ளது. ஏற்காடு மலை பகுதியின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இத்தருணத்தில் பிளாஸ்டிக் பயன்பாடற்ற, பசுமையான, தூய்மையான ஏற்காட்டை உருவாக்குவது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பணித் திட்டமாக உள்ளது. இதனை அடைய பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. அந்தவகையில், "ஏற்காடு எங்கள் பெருமை" என்பதை மையமாகக் கொண்டு இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடத்தப்பட்டது" என்று கூறினார்.

விழிப்புணர்வு நடைப்பயணத்தையொட்டி இன்று காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரை அஸ்தம்பட்டி வழியாக ஏற்காடு மேல்நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், ஏற்காடு - குப்பனுார் சாலையைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

"ஏற்காடு எங்கள் பெருமை" எனும் இவ்விழிப்புணர்வு நடைப்பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பங்கேற்புச் சான்றிதழ், டி-சர்ட் மற்றும் காலை சிற்றுண்டி வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
India vs Bangladesh:இந்தியா - வங்கதேசம் டி20! எங்கே? எப்படி பார்ப்பது? முழு விவரம் உள்ளே
India vs Bangladesh:இந்தியா - வங்கதேசம் டி20! எங்கே? எப்படி பார்ப்பது? முழு விவரம் உள்ளே
விமர்சனங்கள் வர தான் செய்யும்; பணிகளால் தான் எதிர் கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வர தான் செய்யும்; பணிகளால் தான் எதிர் கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle | மீண்டும் அரியணையில் செ.பாலாஜி!புதிதாக சீனுக்கு வந்த 3 பேர்! யாருக்கு எந்த துறை?CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
India vs Bangladesh:இந்தியா - வங்கதேசம் டி20! எங்கே? எப்படி பார்ப்பது? முழு விவரம் உள்ளே
India vs Bangladesh:இந்தியா - வங்கதேசம் டி20! எங்கே? எப்படி பார்ப்பது? முழு விவரம் உள்ளே
விமர்சனங்கள் வர தான் செய்யும்; பணிகளால் தான் எதிர் கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வர தான் செய்யும்; பணிகளால் தான் எதிர் கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Sri Lanka Vs New Zealand:
Sri Lanka Vs New Zealand:"ஒரு சூறாவளி கிளம்பியதே" - நியூசிலாந்தை ஓட விட்ட இலங்கை! 15 வருடங்களுக்குப் பிறகு சாதனை
Watch Video:
Watch Video:"தல போல வருமா" - பண்ணை வீட்டில் ஜாலி மூட்! தோனியின் வைரல் வீடியோ
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Embed widget