மேலும் அறிய

நகராட்சி துறை நியமனத்துக்கு ரூ.35 லட்சம் லஞ்சமா? எழுந்த விமர்சனங்கள்- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு விளக்கம்!

ஒவ்வொரு பணி இடங்களுக்கும் 25 முதல் 35 லட்ச ரூபாய் வரையில் லஞ்சம் பெறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, அண்ணாமலை ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

நகராட்சி நிர்வாகத் துறையின் மூலம் நிரப்பப்பட்ட நேரடி நியமனங்கள் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

 தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறையில் காலி பணியிடங்கள், அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட்டன. இதில் ஒவ்வொரு பணி இடங்களுக்கும் 25 முதல் 35 லட்ச ரூபாய் வரையில் லஞ்சம் பெறப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து துறை அமைச்சர் கே.என்.நேரு தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற அரசியல் உள்நோக்கத்தோடு, பல ஆண்டு காலத்திற்கு முந்தைய வங்கி வழக்கு ஒன்றினை தூசு தட்டி எடுத்து, அதனை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் தோற்றுப் போன ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள மேலும் ஒரு முயற்சிதான், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனம் குறித்த நேற்றைய கடிதம்.

 2011ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையுள்ள பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போதிய நியமனங்கள் செய்யப்படாமல், காலிப் பணியிடங்கள் அதிகமாகி நிர்வாகத்தை மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் இருந்தன.

 இந்த நிலையில், 2019 பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப வேண்டும் என்பதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக கடந்த 2.2.2024 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிற பணியிடங்களையும் சேர்த்து, 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

ஒளிவுமறைவற்ற முறையில் நிரப்ப…

 இப்பணியிடங்களை வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற முறையில் நிரப்புவதற்காக, தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கென தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு, அந்த இணையதளம் மூலமாக, 2 இலட்சத்து 499 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

 அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு இணையவழியில் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக, 38 மாவட்டங்களில் உள்ள 591 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த எழுத்துத் தேர்வுகள் அனைத்தும், அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக மதிப்பீடு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு முடிவுகளும் இணைய தளத்தில் 20.9.2024 அன்று வெளியிடப்பட்டன.

விண்ணப்பதாரர்களிடமிருந்து ஒரு ஆட்சேபணை கூட இல்லை

நியாயமான முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால், இந்தத் தேர்வில் கலந்து கொண்ட இலட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஒரு ஆட்சேபணை கூட பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, பல்வேறு பணியிடங்களுக்கு, பணித் தகுதியின் அடிப்படையில், அதிகாரிகளைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பதவிகளுக்கு 13 தேர்வுக் குழுவினால் 7 ஆயிரத்து 272 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வுகளும் முடிவுற்ற பின்னர், இறுதித் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையிலும், கலந்தாய்வு முறையிலும், இறுதியாக 2,538 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நேரடி நியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், தடையாணைகளும் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 4.7.2025 அன்று, அனைத்து தடைகளும் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதித் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணைகள் முதலமைச்சரால் வழங்கப்படடன. இத்தகைய ஒரு வரலாற்றுச் சாதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் நிகழ்த்தப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், இதற்குக் களங்கம் கற்பிக்கும் வகையில், அமலாக்கத் துறை மூலமாக ஒன்றிய அரசு இத்தகைய அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சுயாட்சி பல்கலைக்கழகங்களுள் ஒன்று

இத்தேர்வுகளை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய அண்ணா பல்கலைக்கழகமானது, உலகில் தலைசிறந்த சுயாட்சி பல்கலைக்கழகங்களுள் ஒன்று என்பதையும், இப்பல்கலைக்கழகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நகராட்சி நிர்வாகத் துறையின் எந்தவிதக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டது அல்ல என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

முந்தைய ஆட்சிக் காலத்திலும், அதாவது கடந்த 2012, 2013, 2014, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு பதவிகளுக்கு இதே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத் தான் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் மட்டும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் தலையிட்டதால் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்ற கூற்று நகைப்புக்குரியது.

இரண்டு இலட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து, ஒரு இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதி, ஒளிவுமறைவற்ற முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதியாக 2,538 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, சிறப்பாகப் பணிபுரிந்து வரும் நிலையில், இவ்வாறு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது.

அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவற்றை முறியடிக்கத் தேவையான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மேற்கொள்ளும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்’’.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
Gaza Israel Hamas: வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
Russia Vs America: புளூடோனியம் ஒப்பந்தம்; புதின் எடுத்த அதிரடி முடிவு; ஆடிப்போன ட்ரம்ப் - இனி என்ன நடக்குமோ.?
புளூடோனியம் ஒப்பந்தம்; புதின் எடுத்த அதிரடி முடிவு; ஆடிப்போன ட்ரம்ப் - இனி என்ன நடக்குமோ.?
TN MRB Recruitment 2025: ரூ.72 ஆயிரம் ஊதியம், 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க- MRB அறிவிப்பு- முழு விவரம்
TN MRB Recruitment 2025: ரூ.72 ஆயிரம் ஊதியம், 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க- MRB அறிவிப்பு- முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சினிமாவுக்கு GOOD BYE ரஜினி திடீர் முடிவு! இதுதான் கடைசி படமா? | Rajini Retirement Kollywood
புயல் இப்படி தான் இருக்குமா? சூறாவளியை வீடியோ எடுத்த அமெரிக்கா ராணுவம்..! | Melissa Cyclone
திமுக கூட்டணிக்கு OPS தூது காதர்பாட்சாவுடன் 1Hour MEETING ஆபரேஷன் ராமநாதபுரம் | OPS Joins DMK
TVK Vijay Slams DMK | ”வீட்டுக்கு போவது உறுதி விவசாயிக்கு என்ன பண்ணீங்க” comeback கொடுத்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
Gaza Israel Hamas: வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
Russia Vs America: புளூடோனியம் ஒப்பந்தம்; புதின் எடுத்த அதிரடி முடிவு; ஆடிப்போன ட்ரம்ப் - இனி என்ன நடக்குமோ.?
புளூடோனியம் ஒப்பந்தம்; புதின் எடுத்த அதிரடி முடிவு; ஆடிப்போன ட்ரம்ப் - இனி என்ன நடக்குமோ.?
TN MRB Recruitment 2025: ரூ.72 ஆயிரம் ஊதியம், 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க- MRB அறிவிப்பு- முழு விவரம்
TN MRB Recruitment 2025: ரூ.72 ஆயிரம் ஊதியம், 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க- MRB அறிவிப்பு- முழு விவரம்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
DGE Trust Exam 2025: ஊரக திறனாய்வு தேர்வு: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?
DGE Trust Exam 2025: ஊரக திறனாய்வு தேர்வு: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?
Affordable Diesel Cars: 10 லட்சம்தான் பட்ஜெட்..  Bolero முதல் XUV 3XO வரை இந்தியாவின் டாப் 5 டீசல் கார்கள் இதுதான்
Affordable Diesel Cars: 10 லட்சம்தான் பட்ஜெட்.. Bolero முதல் XUV 3XO வரை இந்தியாவின் டாப் 5 டீசல் கார்கள் இதுதான்
Ind vs Aus T20: ஃபார்மில் வரும் சூர்யா பசங்க.. அமைதிப்படை ஆஸி பசங்களுடன் மோதல்- இன்று துவங்கும் டி20 தொடர்
Ind vs Aus T20: ஃபார்மில் வரும் சூர்யா பசங்க.. அமைதிப்படை ஆஸி பசங்களுடன் மோதல்- இன்று துவங்கும் டி20 தொடர்
Embed widget