மேலும் அறிய
Advertisement
சிதம்பரத்தில் மீண்டும் குடியிருப்பு பகுதிகள் அடைப்பு
கொரோனா பரவல் காரணமாக சிதம்பரத்தில் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் சில மேலும் சீல் வைக்கப்பட்டன.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களில் சிதம்பரம் நகரில் உள்ள வாகீசன் நகரில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு போல் தற்போதும் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் வாகீசன் நகர் பகுதி தடுப்பு கட்டைகளால் அடைக்கப்பட்டு சீல் வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் கொண்டு செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிதம்பரம் தாசில்தார் ஆனந்த் இன்று வாகீசன் நகர் பகுதிக்கு நேரில் சென்று அங்கே தடுப்பு கட்டைகள் வைத்து அடைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion