சத்தீஸ்கரையை சேர்ந்த 14 இளம் பெண்கள் கரூரில் மீட்பு - செங்கல் சூலையில் விசாரணை
சத்தீஸ்கர் மாநிலம் நாரனபூரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண்கள் காணவில்லை என மாவட்ட ஆட்சியர் ,காவல்துறை கண்காணிப்பாளருக்கு அவர்களது பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர்.
கரூரில் பரபரப்பு சம்பவம்
சத்தீஸ்கர் மாநிலம் நாரனபூரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் காணவில்லை என மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு அவர்களது பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை அடுத்து அதே மாவட்டத்தை சேர்ந்த, சமூக நலத்துறை மற்றும் அம்மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 6 பேர் கொண்ட காவல்துறையினர், தமிழகம் முழுவதும் தேடி இன்று கரூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கரூர் சமூக நலத்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாரனபூரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய 3 பெண்கள் ஜோதி, முஸ்கனா, பூஜா தா ஆகிய மூன்று பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு தெரியாமல் வெளியேறினர். இதனை அடுத்து அவர்களது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை காணவில்லை என அந்த மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களது செல்போன் எண்களை வைத்து பார்த்ததில் கரூர் மாவட்டம் வீரராக்கியம் தனியார் செங்கல் சூளையில் இருப்பது தெரியவந்தது
சமூக நலத்துறை மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை புகாரைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டபோது, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வீரராக்கியம் அருகே உள்ள தனியார் செங்கல் சூலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் காணாமல் போன அந்த மூன்று பெண்கள் என்று தெரிய வந்தது,
மேலும், அதே செங்கல் சூலையில் அதே மாநிலத்தை சேர்ந்த 11 இளம் பெண்களும் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களையும் மீட்டு மாயனூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து 14 இளம் பெண்களிடம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து எப்படி வந்தார்கள் என சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் கரூர் மாவட்ட காவல்துறையினர் உள்பட சமூக நலத்துறை உள்ளிட்டோர் இவர்கள் கொத்தடிமைகளா என பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இளம் பெண்களை அழைத்து வந்த இடைத்தரகர்கள் குறித்தும் விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல் சூலையில் விசாரணை
இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த மாநில குழுவினருடன் துணையாற்றிய செய்புதீன் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் குழுத்தலை போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் மாயனூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் கிருஷ்ணராயபுரம் அருகே வீராக்கியத்தில் உள்ள தனியார் செங்கல் சூலையில் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு காணாமல் போன மூன்று சிறுமிகள் உள்பட 50 வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.
மேலும் அங்கு வேலை பார்த்த மூன்று சிறுமிகள் உள்பட 11 பேர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் 11 பேரும் மீட்கப்பட்டு கரூர் வெங்கமேட்டில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.