மேலும் அறிய
சீர்காழியில் புதரில் வீசப்பட்ட ரேஷன் அரிசி
சீர்காழி அருகே பொதுமக்களுக்கு வினியோகிக்கும் ரேஷன் அரிசிகள் புதரில் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rice_issue_(2)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலையில், நெல்லை அரிசியாக்கி சீர்காழி தாலுகாவில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

அந்த பகுதியின் அருகே உள்ள புதரில் பொதுமக்களுக்கு பயன்படுத்த வழங்கப்படும் அரிசி வீசப்பட்டு, வீணடிக்கப்படுவது தற்போது தெரியவந்துள்ளது. யார் இந்த செயலில் ஈடுபட்டது என்பது தெரியாத நிலையில், மக்களுக்கான பொருளை வீணடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















