Chennai Rains: மழை நீர் தேக்கம்.. சென்னையில பல ரூட் மாற்றம்.. புது ரூட் இதுதான்.! முழு விவரம்!
கே.கே.நகர் ராஜமன்னா.ர் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரின் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் செய்தி வெளியிட்டுள்ளது.
நீர் தேங்கியுள்ள சாலைகள் மற்றும் மழைநீர் போக்குவரத்து காரணமாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பின்வருமாறு;
ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
மேட்லி சுரங்கப்பாதை மழைநீர் தேங்கி உள்ளதால்- போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிப்பட்டுள்ளது.
வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல கேசவர்திணி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.
வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கே.கே.நகர் ஜி.எச் க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் தோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் நிசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகளங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன;
மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லுார் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டடுள்ளது. மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்நல்லுார் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.
அசோக் நகர் போஸ்டல் காலனி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக கடத்து செல்கின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாசிக்க:
அதிகாரிகள் களத்தில் நிற்கணும்.. நானும் நிற்பேன் - தொடரும் மழை குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்