மேலும் அறிய
நாகை : ரம்ஜான் நோன்பை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்புத் தொழுகை..
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
![நாகை : ரம்ஜான் நோன்பை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்புத் தொழுகை.. Ramdan fasting special Namaz offered in Nagapattinam's Nagore Darga நாகை : ரம்ஜான் நோன்பை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்புத் தொழுகை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/03/89fc3040a74b8eb9469d8e57022e2bbe_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாகூர் தர்கா
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள். பிறை தென்பட்டு வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு முஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க துவங்கினர். நோன்பு காலம் துவங்கியதை அடுத்து உலக புகழ் பெற்ற நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா மட்டுமில்லாமல் நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion