மேலும் அறிய

Ramadoss: "தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” - ராமதாஸ்

Ramadoss: மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளை பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

Ramadoss:  மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளை பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி” என தெரிவித்தார்.

"தீபஒளி திருநாள் கடந்த இரு ஆண்டுகளாக மக்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்க வில்லை. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கொரோனா பெருந்தொற்று சூறையாடியிருந்தது தான் அதற்கு காரணம் ஆகும். கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழ்நாடு முழுமையாக மீண்டு விட்ட நிலையில் இந்த ஆண்டு தான் தமிழக மக்களிடம் தீப ஒளியை வரவேற்கும் மகிழ்ச்சி தென்படுகிறது. இந்த மகிழ்ச்சி இனிவரும் காலங்களில் பெருமகிழ்ச்சியாக பெருக வேண்டும்" என தெரிவித்தார்.

”தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் சமூகநீதிக்கும் சறுக்கல்கள் ஏற்பட்டன. மக்கள் முன்னேறவும், சமத்துவத்தை உண்டாக்கவும் சமூகநீதி மிகவும் அவசியமாகும். சமூகநீதியின் ஒளியை சதிகார கூட்டத்தின் கைகள் தடுத்து நின்றாலும் மறைக்க முடியாது. சதிகளால் சறுக்கலுக்கு உள்ளான சமூகநீதி, கிரகணத்தை விலக்கி ஒளிவிட ஆயத்தமாகி வருவதை அறிந்து கொள்ள முடிகிறது. மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் இல்லாமை கூடாது. இல்லாமையை விரட்டுவதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி,  வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும்,  மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துக்கள்” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்” என தெரிவித்தார்.

”நட்பையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தீபஒளித் திருநாள் இனி வரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு முறை தீப ஒளி வாழ்த்துகள்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி! சித்தூர் அருகே சோகம்
லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி! சித்தூர் அருகே சோகம்
Rasipalan January 17:கன்னிக்கு உயர்வு..மகரத்துக்கு விவேகம் - இந்நநாள் எப்படி இருக்கும்? தெரிஞ்சிக்கோங்க!
Rasipalan January 17:கன்னிக்கு உயர்வு..மகரத்துக்கு விவேகம் - இந்நநாள் எப்படி இருக்கும்? தெரிஞ்சிக்கோங்க!
MTC Bus: தொலைந்து போன சிறுவன்.. 40 நிமிடங்களில் மீட்ட அதிசயம்.. ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டுக்கள்
MTC Bus: தொலைந்து போன சிறுவன்.. 40 நிமிடங்களில் மீட்ட அதிசயம்.. ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டுக்கள்
Auroville Manju Virattu : மஞ்சு விரட்டில் இத்தனை வகைகளா? சர்வதேச நகரமான ஆரோவில்லில் மஞ்சு விரட்டு ; உற்சாகத்துடன் கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
Auroville Manju Virattu : மஞ்சு விரட்டில் இத்தனை வகைகளா? சர்வதேச நகரமான ஆரோவில்லில் மஞ்சு விரட்டு ; உற்சாகத்துடன் கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி! சித்தூர் அருகே சோகம்
லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி! சித்தூர் அருகே சோகம்
Rasipalan January 17:கன்னிக்கு உயர்வு..மகரத்துக்கு விவேகம் - இந்நநாள் எப்படி இருக்கும்? தெரிஞ்சிக்கோங்க!
Rasipalan January 17:கன்னிக்கு உயர்வு..மகரத்துக்கு விவேகம் - இந்நநாள் எப்படி இருக்கும்? தெரிஞ்சிக்கோங்க!
MTC Bus: தொலைந்து போன சிறுவன்.. 40 நிமிடங்களில் மீட்ட அதிசயம்.. ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டுக்கள்
MTC Bus: தொலைந்து போன சிறுவன்.. 40 நிமிடங்களில் மீட்ட அதிசயம்.. ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டுக்கள்
Auroville Manju Virattu : மஞ்சு விரட்டில் இத்தனை வகைகளா? சர்வதேச நகரமான ஆரோவில்லில் மஞ்சு விரட்டு ; உற்சாகத்துடன் கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
Auroville Manju Virattu : மஞ்சு விரட்டில் இத்தனை வகைகளா? சர்வதேச நகரமான ஆரோவில்லில் மஞ்சு விரட்டு ; உற்சாகத்துடன் கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
தப்பு பண்ணியானு கேட்டேன்; ஆமானு சொன்னான்: பையனை போலீசில் புடிச்சி கொடுத்தேன் - மன்சூர் அலிகான்!
தப்பு பண்ணியானு கேட்டேன்; ஆமானு சொன்னான்: பையனை போலீசில் புடிச்சி கொடுத்தேன் - மன்சூர் அலிகான்!
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
"அதிக குழந்தைகளை பெத்துக்கலனா.. தேர்தலில் போட்டியிட முடியாது" இறுக்கி பிடித்த சந்திரபாபு நாயுடு
Embed widget