மேலும் அறிய

மீண்டும் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை : கடைசி அறிக்கையில் சொன்னது என்ன?

ரஜினி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், இன்று அரசியல் வருகை பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளார். 

அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஆலோசித்து வருகிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று அவர் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் செயல்பாடுகள் என்ன என்பதை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளேன். மேலும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்தும் அவர்களிடம் ஆலோசிக்கவுள்ளேன்" என்று கூறிச் சென்றார்.

ரஜினி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், இன்று அரசியல் வருகை பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தை மீண்டும் ரசிகர் மன்றமாக்குவார் என்றும் கூறப்படுகிறது.

'அண்ணாத்த' அரசியலா?!

ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை தனது திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன் அரசியல் வருகை பற்றி பேசி விளம்பரம் தேடுவார் என்று பொதுவான கருத்து நிலவுகிறது. இந்நிலையில், அண்ணாத்த திரைப்படம் சில பேட்ச் ஒர்க் முடிந்தால் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷனுக்குத் தயாராகிவிடும். அதனால் அண்ணாத்த பட ரிலீஸை ஒட்டி மீண்டும் இவ்வாறு அரசியல் பேச்சை எடுத்துள்ளாரா என்று விமர்சிக்கப்படுகிறது.

ரஜினி அரசியலை விட்டு விலகுவதாக வெளியிட்ட அறிக்கை:

"என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்‌, ஜனவரியில்‌ கட்சி தொடங்குவேன்‌ என்று அறிவித்து மருத்துவர்களின்‌ அறிவுரையையும்‌ மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில்‌ கலந்து கொள்ள ஹைதராபாத்‌ சென்றேன்‌. கிட்டத்தட்ட 120 பேர்‌ கொண்ட படக்‌ குழுவினருக்கு தினமும்‌ கரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும்‌ தனிமைப்படுத்தி, முகக்‌ கவசம்‌ அணிவித்து, மிகவும்‌ ஜாக்கிரதையாகப் படப்பிடிப்பை நடத்தி வந்தோம்‌.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும்‌ 4 பேருக்கு கரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர்‌ படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும்‌ கரோனா பரிசோதனை செய்வித்தார்‌. எனக்கு கரோனா நெகடிவ்‌ வந்தது. ஆனால்‌ எனக்கு இரத்தக்‌ கொதிப்பில்‌ அதிக ஏற்றத்‌ தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ எனக்கு ரத்தக்‌ கொதிப்பில்‌ தொடர்ந்து ஏற்றத்‌ தாழ்வு இருக்கக்‌ கூடாது, அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கும்‌. ஆகையால்‌ என்னுடைய மருத்துவர்களின்‌ அறிவுரைப்படி அவர்களின்‌ மேற்பார்வையில்‌ மூன்று நாட்கள்‌ மருத்துவமனையில்‌ கண்காணிப்பில்‌ இருக்க நேரிட்டது.

என்‌ உடல்நிலை ௧ருதி தயாரிப்பாளர்‌ கலாநிதி மாறன்‌ அவர்கள்‌ மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார்‌. இதனால்‌ பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய்‌ நஷ்டம்‌. இவை அனைத்துக்கும்‌ காரணம்‌ என்னுடைய உடல்‌ நிலை. இதை ஆண்டவன்‌ எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான்‌ பார்க்கிறேன்‌.
நான்‌ கட்சி‌ ஆரம்பித்த பிறகு ஊடகங்கள்‌, சமூக வலைத்தளங்கள்‌ மூலமாக மட்டும்‌ பிரச்சாரம்‌ செய்தால்‌ மக்கள்‌ மத்தியில்‌ நான்‌ நினைக்கும்‌ அரசியல்‌ எழுச்சியை உண்டாக்கித்‌ தேர்தலில்‌ பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல்‌ அனுபவம்‌ வாய்ந்த யாரும்‌ மறுக்கமாட்டார்கள்‌.

நான்‌ மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி, பிரச்சாரத்திற்குச் சென்று ஆயிரக்கணக்கான ஏன்‌ லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்‌. 120 பேர்‌ கொண்ட குழுவிலேயே கரோனா பாதிப்பு ஏற்பட்டு நான்‌ மூன்று நாட்கள்‌ மருத்துவமனையில்‌ மருத்துவர்களின்‌ கண்காணிப்பில்‌ இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கரோனா உருமாறி புது வடிவம்‌ பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய்‌ எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும்‌ Immuno Suppressant மருந்துகளைச் சாப்பிடும்‌ நான்‌, இந்த கரோனா காலத்தில்‌ மக்களைச் சந்தித்து, பிரச்சாரத்தின்‌ போது என்‌ உடல்நிலையில்‌ பாதிப்பு ஏற்பட்டால்‌ என்னை நம்பி என்கூட வந்து என்னுடன்‌ அரசியல்‌ பயணம்‌ மேற்கொண்டவர்கள்‌ பல சிக்கல்களையும்‌ சங்கடங்களையும்‌ எதிர்கொண்டு, மனரீதியாகவும்‌ பொருளாதார ரீதியாகவும்‌ பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்‌.

மீண்டும் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை : கடைசி அறிக்கையில் சொன்னது என்ன?

என்‌ உயிர்‌ போனாலும்‌ பரவாயில்லை, நான்‌ கொடுத்த வாக்கை தவற மாட்டேன்‌, நான்‌ அரசியலுக்கு வருவேன்‌ என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால்‌ நாலு பேர்‌ நாலுவிதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள்‌ என்பதற்காக என்னை நம்பி என்‌ கூட வருபவர்களை நான்‌ பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால்‌ நான்‌ கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதை அறிவிக்கும்‌ போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்‌ தான்‌ தெரியும்‌.

இந்த முடிவு ரஜினி மக்கள்‌ மன்றத்தினருக்கும்‌, நான்‌ கட்‌சி ஆரம்பிப்பேன்‌ என்று எதிர்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கும்‌ ரசிகர்களுக்கும்‌, மக்களுக்கும்‌ ஏமாற்றத்தை அளிக்கும்‌, என்னை மன்னியுங்கள்‌.

மக்கள்‌ மன்றத்தினர்‌ கடந்த மூன்று ஆண்டுகளாக என்‌ சொல்லுக்குக்‌ கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும்‌, நேர்மையுடனும்‌ கரோனா காலத்திலும்‌ தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்‌திருக்கின்றீர்கள், அது வீண்‌ போகாது. அந்த புண்ணியம்‌ என்றும்‌ உங்களையும்‌ உங்கள்‌ குடும்பத்தையும்‌ காப்பாற்றும்‌.

கடந்த நவம்பர்‌ 30 - ம்‌ தேதி நான்‌ உங்களைச் சந்தித்த போது, நீங்கள்‌ எல்லோரும்‌ ஒரு மனதாக 'உங்கள்‌ உடல்‌ நலம்‌ தான்‌ எங்களுக்கு முக்கியம்‌, நீங்கள்‌ என்ன முடிவெடுத்தாலும்‌ எங்களுக்குச் சம்மதமே' என்று சொன்ன வார்த்தைகளை என்‌ வாழ்நாளில்‌ மறக்கமாட்டேன்‌. நீங்கள்‌ என்மேல்‌ வைத்திருக்கும்‌ அன்பிற்கும்‌, பாசத்திற்கும்‌ தலை வணங்குகிறேன்‌. ரஜினி மக்கள்‌ மன்றம்‌ என்றும்‌ போலச் செயல்படும்‌.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள்‌ வந்தாலும்‌ தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில்‌ உங்க உடல்‌ நலத்தை கவனியுங்க, அதுதான்‌ எங்களுக்கு முக்‌கியம்‌ என்று அன்புடன்‌ கூறிய தமிழருவி மணியன்‌ ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்‌.

நான்‌ கேட்டுக்‌ கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில்‌ பொறுப்பான பதவியிலிருந்து விலகி என்‌ கூட வந்து பணியாற்றச் சம்மதித்த அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும்‌ நன்றி கூற நான்‌ கடமைப்பட்டுள்ளேன்‌.

தேர்தல்‌ அரசியலுக்கு வராமல்‌ மக்களுக்கு என்னால்‌ என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான்‌ செய்வேன்‌. நான்‌ உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை.

உண்மையையும்‌, வெளிப்படைத் தன்மையையும்‌ விரும்பும்‌, என்‌ நலத்தில்‌ அக்கறையுள்ள, என்மேல்‌ அன்பு கொண்ட என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான ரசிகர்களும்‌, தமிழக மக்களும்‌ என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌ என்று அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்.‌"

இவ்வாறு அந்த நீண்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
Embed widget