Rajendra Balaji: ஏன் தலைமறைவாக இருந்தீர்கள்? ராஜேந்திரபாலாஜியிடம் நீதிபதி சரமாரி கேள்வி..
3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்யப்பட்டார்.
![Rajendra Balaji: ஏன் தலைமறைவாக இருந்தீர்கள்? ராஜேந்திரபாலாஜியிடம் நீதிபதி சரமாரி கேள்வி.. Rajendra Balaji Latest News, srivilliputhur court judge questions former aiadmk minister KT rajendra balaji on Absconding Rajendra Balaji: ஏன் தலைமறைவாக இருந்தீர்கள்? ராஜேந்திரபாலாஜியிடம் நீதிபதி சரமாரி கேள்வி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/06/d07f82b593dffb74235cb62a0e09e02a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை இன்று வர இருப்பதால் ராஜேந்திர பாலாஜியின் கைது செய்ததை ஏற்றுக்கொள்ள கூடாது என அவரது வழக்கறிஞர் மாரீஸ்குமார் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
இதைத்தொடர்ந்து, கைதை நிறுத்தினால் வழக்கு தொடர்பான சாட்சியங்கள் களைக்க வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர், கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும், வெளியூர் செல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் ஏன் 20 நாட்கள் தலைமறைவாக இருந்தீர்கள் என நீதிபதி பரம்வீர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்யப்பட்டார்.
'முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சேஸ் செய்து தூக்கிய போலீஸ்’ கர்நாடாகவில் கைது செய்யப்பட்டார்..!#Rajendrabalaji | pic.twitter.com/Q48pVRKl6R
— Raja Shanmugasundaram (@SRajaJourno) January 5, 2022
கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று மாலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை உட்படுத்தப்பட்டநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்பு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரபாலாஜியை வருகிற 20 ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.
இந்தநிலையில், அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கும் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீதிமன்ற காவலுக்கு பிறகு ராஜேந்திரபாலாஜியை காவலுக்கு எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)