TN Rains: வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வெப்பச்சலனம்..
வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,30.05.2022, 31,05,2022, 01.06.2022 ஆகிய தினங்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,
நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழைபெய்யக்கூடும். அதிகபட்ட வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும்குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
28.05.2022: இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 28, 2022
29.05.2022,30.05.2022: லட்சதீவு, தென் கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற் அதனை ஒட்டிய குமரிக்கடல்I தென்தமிழக கடலோரப்பகுதிக சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in இணையதளத்தை காணவும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 28, 2022
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மமை அளவு (சென்டி மீட்டரில்):
வீரகானூர் (சேலம்), வேப்பூர் (கடலூர்) தலா 5, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திருமயம் (புதுக்கோட்டை) தலா 4, சீர்காழி (மயிலாடுதுறை), செந்துறை (அரியலூர்), கரூர், தொழுதூர் (கடலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்). ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வளத்தி (விழுப்புரம்). காரையூர் (புதுக்கோட்டை), அருப்புக்கோட்டைKVK AWS (விருதுநகர்) தலா 3, கோவிலங்குளம் (விருதுநகர்), பேரையூர் (மதுரை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மேலுர் (மதுரை). பெரம்பலார் சோலையார் (கோயம்புந்தார்). கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்