RAIN ALERT:ரெடியா இருங்க... இனிமேதான் பார்க்க போறீங்க... இந்த மழையோட தாக்கத்தை...! வானிலை சொல்வது என்ன?
அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்
அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ”வடகிழக்குப் பருவ மழை உள்தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயலசீமா பகுதிகளுக்கு பரவியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்இலங்கை கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
31.10.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
01.11.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
02.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பதார், சிவகங்கை இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது,
03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, இண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை: அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24.மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஓகேனக்கல் (தர்மபுரி) 5, திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), காரைக்கால், செய்யூர்(செங்கல்பட்டு), முகையூர் (விழுப்புரம்) தலா 4. செங்கல்பட்டு, கடலாடி (ராமநாதபுரம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), காஞ்சிபுரம், பாம்பன் (ராமநாதபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஆரணி (திருவண்ணாமலை), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), சூரங்குடி (நாத்துக்குடி) தலா 3, மயிலாடுதுறை, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) திருப்போரூர் (செங்கல்பட்டு), நன்னிலம் (திருவாரூர்), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), கலவை AWS (ராணிப்பேட்டை), சிதம்பரம் AWS (கடலூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), மரக்காணம் (விழுப்புரம்), கன்னியாகுமரி, நாகர்கோவில் (கன்னியாகுமரி), தொழுதூர் (கடலூர்), பாண்டவையார் (திருவாரூர்), பெரம்பலூர், வைப்பார் (தூத்துக்குடி), குடியாத்தம் (வேலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுவுமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.