மேலும் அறிய

Ungalil Oruvan Book Release: ஸ்டாலின் வயதை என் தாய் நம்பவில்லை; கூகுளில் தேடினோம்.. கலகலக்க வைத்த ராகுல்.. வெடித்து சிரித்த ஸ்டாலின்!

Ungalil Oruvan Book Release: முதலமைச்சர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல்காந்தி கலகலப்பாக பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள  ‘உங்களில் ஒருவன்' சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிட்டார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வரின்  உங்களில் ஒருவன் புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட, துரை முருகன் பெற்றுக்கொண்டார்.  

ராகுல் காந்தி, உமர் அப்துல்லா மற்றும் பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ்,கவிஞர் வைரமுத்து, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராகுல்காந்தி கலகலப்பாக பேசினார்.

Ungalil Oruvan Book Release: ஸ்டாலின் வயதை என் தாய் நம்பவில்லை; கூகுளில் தேடினோம்.. கலகலக்க வைத்த ராகுல்.. வெடித்து சிரித்த ஸ்டாலின்!

அதில், ''முக ஸ்டாலினுக்கு 69 வயது என்று என் தாயிடம் ( சோனியா காந்தி) கூறினேன். அவர் நம்பவே இல்லை. அவருக்கு 50 - 60 வயதுதான் இருக்கு என  அவர் கூறினார். பின்னர் கூகுளில் தேடிக் காண்பித்த பிறகே அவர் ஒப்புக்கொண்டார். தன்னுடைய இளைமை தோற்றம் குறித்து ஸ்டாலின் புத்தகம் எழுத வேண்டும். பல தடைகளை தாண்டி இந்த இடத்துக்கு வந்தவர் ஸ்டாலின். நாடாளுமன்றத்தில் நான் தமிழகம் குறித்து பேசியதை தமிழ்நாடு கொண்டாடியது. என்னை அறியாமலேயே தமிழன் என்று செய்தியாளரிடம் நான் கூறினேன்" என்றார்.

விழாவில் பேசிய சத்யராஜ், பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில், ''எனது ஆங்கிலம் சற்று மோசம்தான். ஆனாலும் நான் கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அது ராகுல்காந்திக்காக. ராகுலை நான் வரவேற்கிறேன். அவர் நம்முடைய தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

ஒரு  சிங்கத்தைப்போல அவர் குரல் கொடுத்தார். நாம் மனிதனாக இருக்க வேண்டுமென்றால் நமக்குள் மனிதநேயம் இருக்க வேண்டும்.  அதற்கு நாம் பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் புத்தகங்களை படித்திருக்க வேண்டும்.  திராவிட முறைப்படி ராகுலை தம்பி என்று அழைக்கிறேன்.  சமூக நீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே திராவிட மாடல்.

4 வருடத்துக்கு முன் கேரளா சென்றபோது சிறந்த முதலமைச்சர் பினராயி என்றேன். எங்களுக்கு அப்படி ஒரு முதலமைச்சர் கிடைக்கவில்லை என்றேன். அப்படியென்றால் பினராயியை தமிழ்நாட்டுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்றனர். நான் கூட்டிச் சென்றால் உங்களுக்கு நல்ல முதலமைச்சர் கிடைக்காமல் போவார்கள் என்றேன். இப்போது தேவையில்லை மு.க ஸ்டாலின் இருக்கிறார். பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இடையே யார் சிறந்த முதலமைச்சர் என்று போட்டி நடைபெறுகிறது’’ என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget