’எனக்கு தடுப்பூசி பற்றி தெரியணும்..’ கொரோனா தடுப்பூசி குறித்த கேள்விகளுக்கு மருத்துவரின் முக்கிய விளக்கங்கள்..

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அரசு மற்றும் மருத்துவர்கள் தடுப்பூசியை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US: 

பொதுமக்கள் பலருக்கும் கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில், பிரபல மருத்துவர் எம்.ராதா சில்வி, தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் பலரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவற்றின் தொகுப்பு பின்வருமாறு:

கேள்வி : எனக்கு தடுப்பூசி பற்றி தெரியணும்? ரத்த அழுத்தம், சர்க்கரை இருக்கிறவர்கள் தடுப்பூசி எடுக்கிறதால் எதுவும்  பக்க விளைவுகள் வருமா?

பதில் : இதுவரை சுகர், பிரஷர் இருக்கிறவங்களுக்கு என்று தனியாக பக்க விளைவுகள் வந்தது இல்லை. அவங்க எல்லாம் போட்டுக்கொள்ளலாம்.

கேள்வி : கொரோனா ஊசியால் பயன் இல்லை என்று பிரச்சாரம் செய்பவர்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? 

பதில் : இந்த மாதிரி பிரச்சாரங்கள் உண்மையில் அறிவியலுக்கு எதிரானது. தடுப்பூசி ஒன்று மட்டும் இந்த நோயிலிருந்து மனிதர்களை காப்பதற்கு ஒரே வழி. நெகடிவ் எண்ணங்களை தவிருங்கள்.

கேள்வி : Swab test negative but CT scan la positive இது எப்படி? 

பதில் : Swab test மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து எடுக்கப்படுகிறது. எடுக்கப்படும் விதம், அந்த நேரத்தில் நோயாளியின் உள்ள வைரஸ் அளவு, அதை பத்திரமாக வைத்து இருந்து பரிசோதனைகள் செய்யும் வரை உள்ள வெப்ப அளவு என்று பல்வேறு காரணிகள் இதில் இருகுகிறவங்களுக்கு இருக்கின்றன. எனவே swab நெகடிவ் என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. அறிகுறிகள் மட்டுமே உண்மையான நிலையை சொல்லும்.

கேள்வி : இதுல சதவிகித கணக்கு எப்படி பாக்குறாங்க? நூறு டெஸ்ட்ல எத்தனை பாசிடிவ் என்பதுதான். எந்த நிலையில் ஆக்சிசன் தேவை?

96% கீழே போனாலே உள்ள நுரையீரல் பிரச்சனை ஆரம்பமாகிறது என்று கண்டுகொள்ளலாம். 90% கீழே போனால் கண்டிப்பா ஆக்சிஜன் தேவை.

கேள்வி :  வாசனை ருசி எல்லாம் தெரிஞ்சும் சிலருக்கு பாசிட்டிவ் வருதே இது ஏன்?

பதில் : ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க எதிர்ப்பு சக்தி பொறுத்து அறிகுறிகள் தோன்றும். முன்னெச்சரிக்கையாக என்ன மருந்து எடுத்துக்கலாம் எனக் கேட்டால், கோவிட் தடுப்பூசி போடுறது மட்டும்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. வேற எந்த மருந்தும் இல்லை.

Tags: Vaccine Corona covid 19 doctor answer

தொடர்புடைய செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..!

திருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..!

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!

டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுக்குள் வருமா கொரோனா தொற்று?

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுக்குள் வருமா கொரோனா தொற்று?

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!