புதுச்சேரி பெற்றோர்களே அலர்ட்! ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை வீடு தேடி வரும் ஓஆர்எஸ், துத்தநாக மாத்திரைகள்!
புதுச்சேரியில் “வயிற்றுப்போக்கை நிறுத்துவோம்; உயிர்களைக் காப்பாற்றுவோம்” சிறப்புத் திட்டம் தொடக்கம்: 73,284 குழந்தைகள் பயனடைய இலக்கு!

புதுச்சேரி: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை சார்பில் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை “வயிற்றுப்போக்கை நிறுத்துவோம்; உயிர்களைக் காப்பாற்றுவோம்” என்ற கருப்பொருளில் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்புத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
“வயிற்றுப்போக்கை நிறுத்துவோம்; உயிர்களைக் காப்பாற்றுவோம்”
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை சார்பில் “வயிற்றுப்போக்கை நிறுத்துவோம்; உயிர்களைக் காப்பாற்றுவோம்” என்ற கருப்பொருளில் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு திட்டம் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநில அளவிலான தொடக்க விழா:
இத்திட்டத்தின் மாநில அளவிலான தொடக்க விழா உப்பளம் திப்புராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்தச் சிறப்பு முகாமினை சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக வயிற்றுப்போக்கு உள்ளது. எனினும், ஓஆர்எஸ் (ORS) கரைசல், துத்தநாக (Zinc) மாத்திரைகள் மற்றும் சரியான நேரத்தில் வழங்கப்படும் உடனடி மருத்துவச் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பெரும்பாலான உயிரிழப்புகளை மிக எளிதாகத் தடுக்க முடியும்" என்று குறிப்பிட்டார்.
வயிற்றுப்போக்கைத் தடுக்கும் முக்கிய வழிமுறைகள்:
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கப் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகளையும் சுகாதாரத்துறை இயக்குநர் வலியுறுத்தினார்:
குழந்தைகள் பிறந்த ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு சத்தான இணை உணவுகளை அளிக்க வேண்டும்.
சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துவதுடன், கைகளைக் கழுவும் பழக்கத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
சுற்றுப்புறத் தூய்மையைப் பேண வேண்டும் மற்றும் குழந்தைகளுக்குரிய உரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்த வேண்டும்.
முன்கூட்டியே வழங்கப்படும் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள்:
இந்தத் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் முன்கூட்டியே ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் மற்றும் துத்தநாக மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், சுகாதாரம், கைகளைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 73,284 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















