Fact Check : விஜய் பேச்சுக்கு சலசலப்பு: புதுச்சேரியில் ரேஷன் கடைகள் செயல்படுகின்றனவா? உண்மையை உடைக்கும் தகவல் !
மரேஷன கடைகள்யில் த்திய அரசின் ஒப்புதலோடு இன்றைக்கு இலவச அரிசி திட்டம் ஒவ்வொரு மாதமும் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார் - அமைச்சர் நமச்சிவாயம்

TVK Vijay Speech: புதுச்சேரியில் ரேஷன் கடைகள் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியது பெரும் சலசலப்பைக் காட்டி இருக்கிறது. புதுச்சேரியில் ரேஷன் கடையில் இல்லை என்று விஜய் தவறான கருத்து என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட கரூர் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சுமார் 72 நாட்களுக்கு பிறகு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார் விஜய், அந்த வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய விஜய், தமிழ்நாடும் புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் எல்லாரும் ஒன்னுதான். நாம் எல்லோரும் சொந்தம்தான். வேற வீட்டில், வேற ஊரில் வேற நாட்டில், வேற மாநிலத்தில் இருப்பதினால் நாம் எல்லாரும் சொந்தங்கள் இல்லை என ஆகிவிட முடியுமா? அது எப்படி முடியும். ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கொள்ளும்போது அந்தப் பாச உணர்வு அதுதான், அது மட்டும்தான். அது இருந்தாலே போதும். வேறெதுவும் தேவையில்லை என பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து பேசிய விஜய், தொடர்ந்து ரேஷன் கடைகள் இல்லாத இடம் புதுச்சேரி தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.
ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறதே என்பதே உண்மையான விஷயம்
ஆனால் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறதே என்பதே உண்மையான விஷயம். புதுச்சேரியில் 2024 ஆம் ஆண்டு முதல் ரேஷன் கடைகள் மீண்டும் செயல்பட தொடங்கின. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன கடைகள் தொடங்கப்பட்டன. ரேஷன் கடைகள் மூலம் அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக புதுச்சேரியில் இலவசமாக அரிசி வழங்கப்பட்ட வந்தது. 2016ஆம் ஆண்டு இலவச அரிசி குறித்து ஏகப்பட்ட புகார்கள் வந்ததை அடுத்து, அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து, மத்திய அரசு நேரடி பண பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதார்களுக்கு அரிசிக்கான தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. அதாவது ஒரு கிலோ அரிசிக்கு ரூபாய் 30 என வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், விஜய்யின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,
விஜய்யை பொருத்தவரை புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரியாமல் பேசியுள்ளார். அவருக்கு சொல்லிக் கொடுத்தவர்கள், சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தவறான கருத்துகளை மக்களிடத்தில் விஜய் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் அவரால் பேச முடியவில்லை. பேசவும் அவருக்கு வாய்ப்பில்லை. அதனால் புதுச்சேரி மாநிலத்தில் எதையாவது பேச வேண்டும் என்றுதான் அவர் பேசியிருக்கிறார். விஜய் பேசியது கூட 12 நிமிடங்களுக்குள் தான். அவர் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எதையாவது பேச வேண்டும், ஏதேனும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகளை பேசிவிட்டு சென்றுள்ளார்.
மேலும், இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான் என்ற விஜய்யின் பேச்சுக்கு பதிலளித்த புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ரேஷன் கடைகளில் அரிசி போடாமல் இருந்தது. அரிசிக்கு பதிலாக பணமாக மக்களுக்கு போடப்பட்டு வந்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலின்போது மக்கள் பணமாக வேண்டாம், அரிசியாக போடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நேரடி பணப்பரிமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சொல்லி மத்திய அரசின் ஒப்புதலோடு இன்றைக்கு இலவச அரிசி திட்டம் ஒவ்வொரு மாதமும் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார்.





















