மேலும் அறிய

முதலமைச்சருடன் எம்எல்ஏ நேரு வாக்குவாதம்... அரசு விழாவில் பரபரப்பு

புதுச்சேரி பிஆர்டிசியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு கருப்புக்கொடி.

புதுச்சேரி: புதுச்சேரி பிஆர்டிசியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு எதிராக நேரு எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறை சார்பில் பேருந்து பணிமனை, மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு விழா, மின் பஸ்கள், மின் ரிக்‌ஷா இயக்கம், ஆட்டோ சவாரி செயலி தொடக்கவிழா இன்று மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரில் நடந்தது. இங்கு மின் பஸ்களை சார்ஜ் செய்யவும், பராமரிக்கவும் தேவையான உள்கட்டமைப்புகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. இதன்மூலம் லாபத்தில் இயங்கிய அரசு போக்குவரத்து கழகத்தை ஒழித்துவிட்டு, முழுமையாக தனியார்மயமாக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது என சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையிலான பொது நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். விழா நடைபெறும்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

இதற்காக இன்று காலை மறைமலை அடிகள்சாலை, கண் டாக்டர் தோட்டம், அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் நின்று கொண்டிருந்தனர்.  விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்பி மற்றும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் கவர்னரை வரவேற்க மறைமலை அடிகள் சாலை, தாவரவியல் பூங்கா எதிரே காத்திருந்தனர். 

அப்போது துணைநிலை ஆளுநரின் கார் வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தை சுற்றி வந்தது. அப்போது ஆங்காங்கே நின்றிருந்த பொது நல அமைப்புகள் நேரு எம்எல்ஏ தலைமையில் கருப்பு கொடிகளுடன் விழா நடைபெற்ற பணிமனை முன்பு திடீரென குவிந்தனர்.

அவர்கள் கருப்புக்கொடியை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி முன்பு காட்டினர். இதனால் அங்கு திடீர் பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கவர்னர், முதல்அமைச்சரை பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர்.  நுழைவுவாயில் கதவை அடைத்து போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதை தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் நேரு எம்எல்ஏ மகன் ரஞ்சித்குமார் சட்டை கிழிந்தது. உதவியாளர் செங்குட்டுவன் கீழே விழுந்ததால் காயமடைந்தார். 

இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனிடையே நேரு எம்எல்ஏ விழா அரங்கில் நுழைந்து, மேடை ஏறி முதல் அமைச்சரிடம், தனியார்மயத்தை எப்படி ஆதரிக்கலாம்? ஒரு கிமீக்கு ரூ.30 தருவதற்கு பதிலாக ரூ.65 வழங்குவது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

பின்னர் அவர் விழாவை புறக்கணித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். நேரு எம்எல்ஏ தலைமையில் மறைமலை அடிகள் சாலையில் சமூகநல அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடியுடன் கோஷம் எழுப்பினர்.  பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Embed widget