மேலும் அறிய

No Tension மக்களே ! ஆட்டோ சவாரிக்கு புதிய APP... இனி இஷ்டத்திற்கு காசு வாங்க முடியாது - அரசு அதிரடி

ஆட்டோ சவாரிக்கான ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை

புதுச்சேரி: ஆட்டோ சவாரிக்கான ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பாரம்பரிய கட்டடங்கள், அழகிய கடற்கரை, படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் தொடங்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தர, விடுதிகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிக தேடப்படும் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த லோன்லி பிளானட் என்ற பயண ஊடக நிறுவனம், 2025ம் ஆண்டிற்கான சிறந்த பயண இடங்களை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. லோன்லி பிளானட்டின் பயண வழிகாட்டியில் 30 பிரபலமான இடங்கள், நகரங்கள், நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களை குறிப்பிட்டுள்ளது. அதன்படி சிறந்த நகரங்கள் பட்டியலில், பிரான்ஸ் நாட்டின் துலுாஸின் கால்வாய் கரைகள் முதல் இடத்தை பிடித்துள்ளது.அடுத்தபடியாக இந்தியாவில் புதுச்சேரி கடற்கரை 2ம் இடத்தை பிடித்துள்ளது. பல்கேரியாவின் பான்ஸ்கோ 3ம் இடம் பிடித்துள்ளது.

புதுச்சேரிக்கு சுற்றுலாவிற்காக வருபவர்கள் கார்களில் பலர் வந்தாலும், புதுச்சேரிக்குள் வந்தவுடன் வாடகை இருசக்கர வாகனங்களில் வலம் வந்தாலும் ஆட்டோவை நாடுவோர் அதிகமாக உள்ளனர். புதுச்சேரியில் அரசு தரப்பில் போதியளவு வாகன வசதி அதிகம் இல்லை என்பதால் ஆட்டோவின் தேவை இன்றைக்கும் மிக முக்கிய அளவில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த ஆட்டோ கட்டணத்தை இஷ்டத்துக்கு பலரும் வசூலிக்கின்றனர்.

இதனால் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி போக்குவரத்து துறையானது ஆட்டோ கட்டணங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. 1.8 கிமீ தொலைவுக்கு குறைந்தபட்சம் ரூ.35 என நிர்ணயித்தது. இதை ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கவில்லை. விலைவாசி உயர்வு, பெட்ரோல் உயர்வை காட்டி அவர்களது இஷ்டத்திற்கு பலரால் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இங்குள்ள எந்த ஆட்டோக்களிலும் மீட்டர் இல்லை. ஆளுக்கு தகுந்தாற்போல் இஷ்டத்துக்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். கட்டணத்தை போக்குவரத்துத்துறை முறைப்படுத்தினால் பலரும் ஆட்டோவில் பயணிப்போம். பலருக்கும் ஆட்டோ தேவையாக உள்ளது என்று புதுச்சேரிக்குள் வருவோர் தெரிவிக்கின்றனர். உள்ளூர் மக்களின் கருத்தும் இதுவே. ஆட்டோ ஓட்டுநர் கூறுகையில், சரியான கட்டணத்தை அரசு நிர்ணயிக்கவில்லை. நகரப் பகுதியில் இருசக்கர வாகன வாடகை விடும் கடைகள் அதிகமாகவுள்ளன. அதனை அரசு முறைப்படுத்தவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், ஆட்டோக்களை தேடுவது குறைந்துள்ளது. இதனால் நாங்களும் பாதிக்கப்படுகிறோம் என்று தெரிவித்தனர்.

இதுபற்றி புதுச்சேரி போக்குவரத்து ஆணையர்  கூறுகையில்,

ஆட்டோ சவாரிக்கான ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு ஆட்டோ ஓட்டுனர்களுக்குச் சமமான ஊதியம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த கேரளா, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் உள்ளது போல் ‘APP’  செயலி ஒன்றை உருவாக்கி வருகிறோம். டிசம்பர் 31-ம் தேதிக்குள் இதை அமல்படுத்த முயற்சித்து வருகிறோம். தனியார் இரு சக்கர சேவை வாகனங்களை போக்குவரத்துத் துறையின் உரிய உரிமம் பெறாமல் வாடகைக்கு விட்டால், மோட்டார் வாகன சட்டம் 1089ன் படி வாகனம் பறிமுதல் செய்து குற்ற வழக்கு தொடர்வோம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget