கரூர் மாவட்டத்தில் 8.94 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்
கரூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 8,94,345 வாக்காளர்கள் உள்ளனர். வழக்கம்போல் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து, 345 வாக்காளர்கள் உள்ளனர். வழக்கம்போல ஆண்களை விட, பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டு கூறியதாவது: இறுதி வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் 4,30,275 ஆண் வாக்காளர்களும் நான்கு லட்சத்து 63 ஆயிரத்து 976 பெண் வாக்காளர்களும் 94 இதர வாக்காளர்களும் என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 345 வாக்காளர்கள் உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வாயிலாக அரவக்குறிச்சி தொகுதியில் 1,414 ஆண் வாக்காளர்களும், 1,660 பெண் வாக்காளர்களும் என 3,074 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் 1393 ஆண் வாக்காளர்களும், 1273 பெண் வாக்காளர்களும் என 2,666 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
கரூர் தொகுதியில் 2,561 ஆண் வாக்காளர்களும், 3041 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,605 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2,760 ஆண் வாக்காளர்களும், 2,853 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 5,613 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 1,858 ஆண் வாக்காளர்களும், 2,233 பெண் வாக்காளர்களும்,3 இதர வாக்காளர்களும் என 4,094 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 1,667 ஆண் வாக்காளர்களும் 1,863 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளரும் என மொத்தம் 3,541 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
குளித்தலை தொகுதியில் 2,160 ஆண் வாக்காளர்களும் 2,542 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4,702 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 1,921 ஆண் வாக்காளர்களும் 2,324 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4,245 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 7,793 ஆண் வாக்காளர்களும், 9,476 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் என மொத்தம் 17,475 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே போல் 7,751 ஆண் வாக்காளர்களும், 8,313 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளரும் என மொத்தம் 16,065 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் வாக்காளர் அடையாள அட்டையுடன் 74 சதவீதம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ தியாகத், ஆர்.டிஓக்கள் ரூபினா, புஷ்பா தேவி, சப் கலெக்டர் சைபுதீன், தேர்தல் பிரிவு தாசில்தார் விஜயா உட்பட பலர் பங்கேற்றனர்.