குழந்தைகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் சைல்டுலைன் 1098
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும், வன்முறை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை கரூர் சைல்டுலைன் 1098 நிர்வாகிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கரூர் ரயில் நிலையத்தில் இரும்புப் பாதை காவல் ஆய்வாளர் தலைமையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல் குறித்து கரூர் சைல்டுலைன் நிர்வாகிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறையை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் ரயில் நிலையம் பகுதியில் இரும்பு பாதை காவல் ஆய்வாளர் கேசவன் தலைமையில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை கரூர் சைல்டுலைன் 1098 நிர்வாகிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்பொழுது குழந்தைகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் தேசிய அளவிலான இலவச அவசர தொலைபேசி எண் 1098 பற்றிய பல்வேறு விழிப்புணர்வு செயல்களைப் பற்றி விளக்கவுரை ஆற்றினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில் பாதை காவல்படை அதிகாரி நாயுடு மற்றும் கரூர் சைல்டு லைன் நிர்வாகிகளான அனிதா, நித்தியா, தாரணி மற்றும் ராஜேஷ் குமார் உள்ளிட்ட நபர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, பேருந்துகளில் ஏற்படும் அவதூறு பேச்சு (கிண்டல், கேலி) ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு இந்த பாதுகாப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச், பற்றி வீடுகளிலும், பள்ளிகளிலும் கற்றுத் தர வேண்டும் போன்ற பல்வேறு குழந்தைகள் குறித்து, விழிப்புணர்வு நடைபெற்றது. அந்த காலத்தில் சிறு வயதிலேயே திருமணம் செய்வது நடைமுறையாக இருந்தது. ஆனால், இப்போது அதை தடுக்க பல வருடங்களுக்கு முன்பு, குழந்தை திருமணச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்து, குழந்தை திருமணத்தை செய்வோரின் அந்த குழந்தையை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பதும், குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போரை கைது செய்யவும், குழந்தைகளை திருமணம் செய்து வைக்காமல் இருக்கவும், குழந்தை திருமணத்தை நடத்த முயற்சிப்போரை 1098 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம் எனவும், அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மென்மேலும் உயர்கல்வி படிப்பதற்கு இச்சட்டம் உதவி கொண்டிருக்கிறது. அதாவது, 2021 ஆம் ஆண்டில் குழந்தைகள் திருமண சட்டம், பெண்களின் வயது 18 லிருந்து 21 ஆக மாற்றியது. அதேபோல, ஆண்களின் வயது 21 லிருந்து 24 ஆக மாற்றியது. இதனால் சிறு வயதிலேயே குழந்தை திருமணம் செய்வதை தடுக்க, அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது.
சைல்டு லைன் கொண்டு வருவதற்கு முன்பு, அதிகமாக தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் நடைபெற்றது. ஆனால், இந்த சைல்டு லைன் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்த பிறகு குறைவான குழந்தை திருமணமே நடக்கிறது. அந்த குறைவான குழந்தை திருமணம் தடுக்க, இந்த சைல்டு லைன் மென்மேலும் முயற்சி செய்து வருகிறது. ஆகையால், முதலில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால், இந்த குழந்தை திருமணத்தை தடுக்க முடியும் என ஆர்வலர்கள் உறுதி எடுத்தனர். அதேபோல, அதிகமாக மக்கள்கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை திருமணத்தை தடுக்க பல்வேறு வழிகளில் இந்த ஆர்வலர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும், குழந்தை திருமணத்தை விருப்பமின்றி நடத்தினால், குழந்தைகள் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் அந்த திருமணம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர்.