மேலும் அறிய

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு - பெரியார் பல்கலைக்கழகத்தின் முன் போராட்டம்! என்னவாகும் பட்டமளிப்பு விழா?

ஆளுநர் சேலம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் கருப்பு சட்டை போராட்டம் மற்றும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 28 ஆம் தேதி (இன்று) ஆளுநர் தலைமையில் 21 வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கனவே அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், பெரியார் பல்கலைக்கழகத்தின் 21 வது பட்டமளிப்பு விழா வரும் ஜூன் 28 ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு முதுமுனைவர் பட்டம் பெறும் நான்கு பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 505 மாணாக்கர்களுக்கும், முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 99 பேருக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்டச் சான்றிதழை விழா மேடையில் வழங்கி விழா தலைமையுரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக முன்னாள் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பட்டமளிப்பு விழா நடைபெறுவதன் வாயிலாக சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 53,625 மாணாக்கர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,076 மாணாக்கர்களுக்கும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 6,415 மாணாக்கர்களும் பட்டங்களைப் பெற உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என துணைவேந்தர் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.ஜெகநாதன் தலைமையில் பதிவாளர் கே.தங்கவேல், தேர்வாணையர் எஸ்.கதிரவன் மற்றும் பேராசிரியர்கள், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் இல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசி எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்கிறோம் என பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

பின்னர் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் பெற்றோர் மற்றும் மாணவர்களின் நலன் கருதி சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக அறிக்கை வெளியிட்டது.

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு - பெரியார் பல்கலைக்கழகத்தின் முன் போராட்டம்! என்னவாகும் பட்டமளிப்பு விழா?

இந்த சுற்றறிக்கை குறித்து விளக்கும் தெரிவித்துள்ள சேலம் மாவட்ட காவல்துறை, பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதி சேலம் மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கையில் இடம் பெற்றிருக்கும் அறிவுரைத்தல்கள் நாங்கள் வழங்கவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சேலம் மாநகர காவல் துறையும் நாங்கள் எந்தவித அறிவுறுத்தலும் வழங்கவில்லை என அறிக்கை வெளியிட்டது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தொடர்ச்சியாக சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.

ஆளுநர் சேலம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் கருப்பு சட்டை போராட்டம் மற்றும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்து வந்தனர். இதனால் பெரியார் பல்கலைக்கழகம் முழுவதுமாக சேலம் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பல்கலைக்கழகத்தில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெரியார் பல்கலைகழகத்தில் திராவிட விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரியார் பல்கலை கழகம் முன்பு பரபரப்பாக காட்சி அளிக்கிறது. 

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
ஒரே நாளில் தீக்கிரையான 6.5 டன் கஞ்சா! செங்கல்பட்டில் பரபரப்பு... நேரலையில் கவனித்த முதலமைச்சர்!
ஒரே நாளில் தீக்கிரையான 6.5 டன் கஞ்சா! செங்கல்பட்டில் பரபரப்பு... நேரலையில் கவனித்த முதலமைச்சர்!
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - அதிகாரிகளின் விளக்கம் என்ன?
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - விளக்கம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Embed widget