அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் : முதல்வரிடம் கே.எஸ்.அழகிரி கோரிக்கை

நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என முதல்வருக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்

தமிழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்வினால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சி.பி.எஸ்.இ மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, அதிக வாய்ப்பு கிடைக்கிற அநீதி நடைபெறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018-19 மற்றும் 2019-20-ஆம் ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் படித்த 700 மாணவர்களுக்கு நீட் மூலமாக தேர்வு நடைபெற்றிருந்தாலும், இதில் 9 மாணவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. நீட் தேர்வின் காரணமாக அநீதி அதிகரித்ததே தவிர குறையவில்லை என நீட் தேர்வை கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். தமிழக அரசின் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு காரணமாக மொத்தமுள்ள 3,400 இடங்களில் அரசுப்பள்ளியில் படித்த 405 மாணவர்களுக்குதான் வாய்ப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கே.எஸ்.அழகிரி, மீதமுள்ள 3000 இடங்களில் சி.பி.எஸ்.இ மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்பு கிடைத்துள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வினால் இழைக்கப்பட்டுவரும் அநீதியை போக்குவதற்கு, தமிழகத்தில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அமைந்திட, குறிப்பாக அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட உரிய நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் : முதல்வரிடம் கே.எஸ்.அழகிரி கோரிக்கை

தமிழக அரசு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், நீட் தேர்வை நடத்துவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வினால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் நிலையில் சி.பி.எஸ்.இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கின்ற அநீதி நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிவரத்தின்படி கடந்த 15 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் கடும் சோதனைகளை சந்தித்து வந்துள்ளனர். கடந்த 2006 முதல் 2016 வரை அரசுப் பள்ளிகளில் படித்த 340 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் விதிவிலக்காக 2007-ஆம் ஆண்டில் மட்டுமே அரசுப்பள்ளிகளில் படித்த 62 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பைப் பெற்றனர். ஆனால் 2013-ஆம் ஆண்டில் மிக மோசமாக வெறும் 18 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள கே.எஸ்.அழகிரி, நீண்ட காலமாக அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு, இத்தகைய அளவில்தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: KS Alagiri neet exam government school CBSE Medical Education

தொடர்புடைய செய்திகள்

வேலூர் : தனியார் போர்வெல் நிறுவனத்தில் போலி டீசல் உற்பத்தி : காவல்துறையினர் தீவிர விசாரணை

வேலூர் : தனியார் போர்வெல் நிறுவனத்தில் போலி டீசல் உற்பத்தி : காவல்துறையினர் தீவிர விசாரணை

திருவண்ணாமலை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் என்ன?

திருவண்ணாமலை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் என்ன?

கரூர் : எலக்ட்ரிக்கல் கடைக்கு பூட்டு போட்டு எச்சரித்த நகராட்சி அதிகாரிகள்!

கரூர் : எலக்ட்ரிக்கல் கடைக்கு பூட்டு போட்டு எச்சரித்த நகராட்சி அதிகாரிகள்!

பாஜகவை விமர்சித்த ஊடகவியலாளர் மீதான வழக்குகளுக்கு சாதகமான தீர்ப்பு : வைகோ வரவேற்பு

பாஜகவை விமர்சித்த ஊடகவியலாளர் மீதான வழக்குகளுக்கு சாதகமான தீர்ப்பு : வைகோ வரவேற்பு

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து; ரூ. 25 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து; ரூ. 25 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Tamil Nadu Corona LIVE: புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!

30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!

தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் -டாக்டர் ராமதாஸ் அறிக்கை.

தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் -டாக்டர் ராமதாஸ் அறிக்கை.

அடுத்த 100 நாட்களில் அனைவரும் அர்ச்சகராகும் சட்டம் அமல்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அடுத்த 100 நாட்களில் அனைவரும் அர்ச்சகராகும் சட்டம் அமல்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி