TVK Vijay: 41 பேரை கொன்ற விஜய்.. சர்ச்சில் அரசியல் பேசிய பாதிரியார்.. கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள்!
நம்ம பையன் கிட்ட நீ என்னவாக ஆகப் போகிறாய் என கேட்டு பாருங்க.. விஜய் ரசிகனாகப் போகிறேன் என பதில் வரும். 41 பேரை கொன்று குவிச்சவனுக்கு ரசிகனாக போகிறார்களாம் என பாதிரியார் காட்வின் ரூபஸ் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பின்னால் இளைஞர்கள், குழந்தைகள் கூட்டம் ஏன் சிந்திக்க வேண்டும் என தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் சர்ச்சைப் பேச்சு
இதுதொடர்பாக வைரலாகும் வீடியோவில், “வெளிநாட்டில் ஆஸ்ட்ரோ ஃபிசிக்ஸ் எடுத்துப் படிக்கப் போகிறேன் என ஒரு சின்னப் பையன் சொல்றான். ஆனால் நம்ம பையன் கிட்ட நீ என்னவாக ஆகப் போகிறாய் என கேட்டு பாருங்க.. விஜய் ரசிகனாகப் போகிறேன் என பதில் வரும். 41 பேரை கொன்று குவிச்சவனுக்கு ரசிகனாக போகிறார்களாம். நாம் எல்லாம் விலங்கு போட்டால் தான் கையை மேலே தூக்கி காட்டுவோம். இந்த தலைவர் நான் ஏற்கனவே விலங்கு போட்டுருக்கேன் என சைகை காட்டுகிறார். அவர் பின்னால் செல்லும் கூட்டம் அதிகமாக கொண்டிருக்கிறது.
நான் விஜய்க்கு எதிரி அல்ல. ஆனால் சினிமா நடிகர்கள் மீது இந்த இளைஞர்கள், குழந்தைகள் எல்லாம் ஏன் போ கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். பாரம்பரியம் என்பது நேற்றோடு, இன்றோடு முடிவதல்ல.. அது Relay Race மாதிரி தொடர் பயணமாகும்” என திருநெல்வேலி செயின்ட் சேவியர் கல்லூரி முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் தெரிவித்துள்ளார்.
கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள்
இந்த நிலையில் பாதிரியால் காட்வின் ரூபஸ் பேசியது தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயத்தில் அரசியல் பேசலாமா என கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நேற்று (டிசம்பர் 22) மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவருக்கு கிறிஸ்தவர்களின் ஒருதரப்பினர் முழு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் விஜய்க்கு எதிராக பாதிரியார் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு தீவிரமாக் செயல்பட்டு வரும் விஜய் அனைத்து தரப்பினர் வாக்குகளையும் பெற முயற்சி மேற்கொண்டு வருகின்றார். மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதில் முழு முயற்சியுடன் செயல்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியானது தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு திருப்பலியின் போது நடைபெற்றுள்ளது. பாதிரியாரின் இந்த பேச்சு தொடர்பாக தேவலாய பாதிரியார் அலோசியஸ் இடம் புகாரளிக்கப்பட்டது. வழிபாட்டு தலத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனவும், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பாதிரியார் காட்வின் ரூபஸ் வீடியோ வெளியிட வேண்டும் இளைஞர்கள் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் கரூர் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது விஜய் தான் 41 பேரை கொன்றார் என பாதிரியார் பேசியிருப்பது கிரிமினல் குற்றமாகும் எனவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.





















