Pongal Parisu 2025: வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Pongal Parisu Thoguppu 2025: இதோடு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலை அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Pongal Gift in Ration Shop 2025: அரிசி குடும்ப அட்டைதாரகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட அனைத்து அரசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கும்.
இதோடு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலை அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று விநியோகம் செய்யப்படும் என அறிவித்த நிலையில், நாள், நேரம் குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சென்று பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 100 பேர் மதியம் 100 பேர் என கணக்கிட்டு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா விடுதி பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.