03/01/2025-ன் ராசிபலன்

Published by: ABP NADU

மேஷம்

எதிர்பாராத முடிவுகள் சாதகமாக அமையும், தடைபட்ட பணிகள் இன்று முடியும், உழைப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

அனுகுமுறைகளால் மாற்றம் ஏற்படும், ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் மறையும்., துரிதமாக செயல்படுவீர்கள்.

மிதுனம்

மனதளவில் குழப்பங்கள் ஏற்படும், வியாபார முடிவுகளில் கவனம் வேண்டும், விவேகம் வேண்டிய நாள்.

கடகம்

எண்ணிய பணிகள் செய்வதில் காலதாமதம் உண்டாகும்,விவேகத்துடன் செயல்படுங்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும்.

சிம்மம்

திறமைகள் வெளிப்படும் நாள், சிந்தனைகள் மூலம் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும், எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும்.

கன்னி

வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும், லாபங்கள் அதிகரிக்கும், நற்செயல் நிறைந்த நாள்.

துலாம்

சிந்தனைகளால் சோர்வு ஏற்படும், திடீர் செலவுகள் உண்டாகும், மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்

பொருளாதார சிந்தனைகள் மேம்படும், ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும், தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

தனுசு

பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சிந்தனை போக்கில் மாற்றம் உண்டாகும்.,ஊக்கம் நிறைந்த நாள்.

மகரம்

அனுபவ அறிவு வெளிப்படும், சுபசெலவு நிறைந்த நாள்,வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும்.

கும்பம்

பணியில் பொருப்புகள் அதிகரிக்கும், செலவுகளால் நெருக்கடி உண்டாகும், திட்டமிட்டு செயல்படவும்.

மீனம்

தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும், கூடுதல் கவனமாக இருக்கவும், பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும்.