மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Covid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தாக்குதலுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 26,126 பேர் உயிரிழந்திருக்க வேண்டும் - ராமதாஸ்

தமிழ்நாட்டில் 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டது  தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " தமிழ்நாட்டில்  கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்படுவதாக பா.ம.க. குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக  1.13 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குடும்பத் தலைவர்கள் பலரை கொரோனா பலி வாங்கி விட்ட நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகளையும் தடுக்கும் வகையில் உயிரிழப்புகளை மறைப்பது கண்டிக்கத்தக்கது.

கொரோனா உயிரிழப்புகளை தமிழக அரசு திட்டமிட்டே குறைத்துக் காட்டுவதாகவும், உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த மே 15ம் தேதி புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதேபோல், கொரோனாவால் உயிரிழந்த பலருக்கும் அவர்கள் வேறு நோய்களால் உயிரிழந்ததாக தவறான சான்றிதழ் அளிக்கப்படுவதாகவும் கடந்த 4ம் தேதி இன்னொரு அறிக்கையை வெளியிட்டேன். ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐ.சி.எம்.ஆர் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு, அந்தக் குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மறுத்தது. ஆனால், இப்போது உண்மை அம்பலத்துக்கு வந்துவிட்டது.

Covid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக  அறப்போர் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடிமக்கள் ஆய்வில் கொரோனா உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் தவறானவை; திரிக்கப்பட்டவை என்பது உறுதியாகியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருப்பூர், வேலூர் ஆகிய 6 மாநகரங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 11,699 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவமனை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதே காலக்கட்டத்தில் 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 7262-ம், 2020-ம் ஆண்டு உயிரிழப்புகளை விட 8438-ம் அதிகம் ஆகும். அதன்படி பார்த்தால் ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 6 மருத்துவமனைகளில் மட்டும் கொரோனாவுக்கு  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7262 முதல் 8438 வரை இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.

ஆனால், சம்பந்தப்பட்ட 6 மருத்துவமனைகளில் கடந்த 2 மாதங்களில் 863 பேர் மட்டுமே கொரோனாவால் இறந்ததாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம்  6 மருத்துவமனைகளில் மட்டும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 9.80 மடங்கு, 7575 உயிரிழப்புகள் குறைத்துக் காட்டப்பட்டிருப்பதாக கருதலாம். இதே அளவீட்டை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருத்திப் பார்த்தால் கொரோனாவால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தாக்குதலுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 26,126 பேர் உயிரிழந்திருக்க வேண்டும். 12,870 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 13,256 சாவுகள் மறைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Covid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு

இந்த புள்ளிவிவரம் யூகத்தின் அடிப்படையிலானது தான். இது துல்லியமாக இருக்க வேண்டியதில்லை தான். அதேநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டது உண்மை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. மறைக்கப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை  இந்த ஆய்வில் தெரியவந்ததை விட ஓரிரு விழுக்காடு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். ஆனால், சற்றேறக்குறைய ஒரு லட்சம் உயிரிழப்புகளாவது மறைக்கப்பட்டிருக்கலாம் என்பது உறுதி. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசால் கணக்கில் காட்டப்பட்டதை விட 5 முதல் 8 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று கடந்த சில வாரங்களாகவே  பாட்டாளி மக்கள் கட்சி கூறி வந்தது. இந்த ஆய்வறிக்கையின் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கொரோனா ஆய்வு முடிவு வருவதற்கு முன்பாகவே உயிரிழந்தவர்கள்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நெகட்டிவ் வந்து உயிரிழந்தவர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்று தமிழக அரசு கணக்கிட்டிருக்கிறது. உயிரிழப்புக்கு காரணமான பல நோய்களும், உடல்நலப் பிரச்சினைகளும் கொரோனாவால் தான் ஏற்பட்டன எனும் போது, அவர்களின் உயிரிழப்புக்கு கொரோனா காரணமல்ல என்று பதிவு செய்வது அபத்தத்தின் உச்சமாகும்.  

இந்தத் தவறை செய்து விட்டு, ஐ.சி.எம்.ஆர் விதிகளை காரணம் காட்டி பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையிலோ, வீட்டிலோ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் அனைவரும் கொரோனாவால் உயிரிழந்தவர்களாகவே கருதப்பட வேண்டும். கொரோனா உயிரிழப்புகளை உறுதி செய்வதற்கான இந்த அளவீட்டை அரசு ஏற்க வேண்டும்.

மராட்டியம், தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் யார்? என்பதற்கான அளவீடு திருத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும்  அதேபோல் புதிய அளவீட்டின்படி கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும்.

Covid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதி உதவிகளை தமிழக அரசும், மத்திய அரசும் அறிவித்துள்ளன. கொரோனா தாக்குதலால் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய உதவிகளைப் பெற கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும், அதற்கான உண்மையான  காரணங்களுடன் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். எனவே, கடந்த ஏப்ரல், மாதங்களில் உயிரிழந்த அனைவரின் இறப்புக்கான காரணங்களையும் ஆய்வு செய்து, கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு இறப்புக் காரணத்திற்கான மருத்துவச் சான்றை (Medical Certification for cause of death)) வழங்க வேண்டும்; அதற்கான வல்லுனர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை  தமிழக அரசு அமைக்க வேண்டும். கொரோனா உயிரிழப்பு குறித்த அரசின் உதவிகளைப் பெறுவதற்கு அச்சான்றிதழை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
Assembly Election Results 2024 LIVE: வயநாடு இடைத்தேர்தல்; 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று பிரியங்கா காந்தி முன்னிலை
Assembly Election Results 2024 LIVE: வயநாடு இடைத்தேர்தல்; 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று பிரியங்கா காந்தி முன்னிலை
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
Top 10 News: மகாராஷ்டிராவை கைப்பற்றும் பாஜக+, ஜார்கண்டில் முட்டி மோதும் காங். கூட்டணி -    டாப் 10 செய்திகள்
Top 10 News: மகாராஷ்டிராவை கைப்பற்றும் பாஜக+, ஜார்கண்டில் முட்டி மோதும் காங். கூட்டணி - டாப் 10 செய்திகள்
Embed widget