அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. 2026-இல் பாமக ஆட்சி அமைக்கும்.. அன்புமணி ராமதாஸ்
2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும், 2024-இல் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் குறித்த பேட்டியில்,
பா.ம. தலைமையில் கூட்டணி
"நாங்கள் 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்ற வியூகங்களை 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுத்துவோம். ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன் வடிவில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் பல கட்சிகள் பல விதமாக உள்ளனர். உலகின் பிரச்சனை காலநிலை மாற்றம் அதை பற்றி யாரும் பேசுவதில்லை.
2026ல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும். அதற்கான வியூகங்களை 2024ல் பாமக தொடங்கும். அதிமுக கூட்டணியில் நீட்டிப்பது குறித்த கேள்விக்கு, பாமக தலைமையில் தான் கூட்டணி அமையும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தான் இரண்டு கட்சிகளும் திட்டமிடுகிறார்கள் 30, 40 ஆண்டுகளுக்கு திட்டமிடுவதில்லை. சென்னைக்கு இரண்டாம் விமான நிலையம் அவசியம் இது தொடர்பாக பாமக ஆறு முறை அறிக்கை அனுப்பி உள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்:
திருப்போரூர் அருகே ஐயாயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது. ஆனால் அதற்கு அருகில் கல்பாக்கம் உள்ளது என்று காரணத்தை சொல்கிறார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் அந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டை 81 சதவீதம் விழுக்காடாக உயர்த்த அந்த மாநில முதல்வர் திட்டமிட்டுள்ளார் அதில் குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு 32 விழுக்காடு தர முடிவு செய்துள்ளது அதை பாமக வரவிருக்கிறது. பிராமணர், ரெட்டியார், நாடார் முதலியார், வெள்ளாளக் கவுண்டர், தேவர் ,தாழ்த்தப்பட்டவர்கள் என்ன சமுதாயத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கொடுங்கள் இதைத்தான் தந்தை பெரியார் கூறினார்.
தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை மறுபடியும் பலர் ஆட ஆரம்பித்துள்ளனர் ஆளுநர் கையெழுத்து போட்டு லட்சக்கணக்கான குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என பாமக வேண்டுகோள். முதல்வர் மற்றும் ஆளுநர் அரசியலமைப்புக்கு உட்பட்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்து இருக்கிறார்கள் அவர்கள் மக்கள் நலன் சார்ந்து ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். எந்த ஈகோ இருந்தாலும் முதல்வர் ஆளுநரை சந்தித்து பேச வேண்டும் இருவருக்கும் ஈகோ இருந்தால் அதை தமிழகம் தான் பாதிக்கும். ஆளுநர், ஜனாதிபதி அவர்கள் நடுநிலையில் இருக்க வேண்டும் அவர்கள் அப்படி இல்லை என்பதைப் போல கேள்வி எழுந்துள்ளது. காசி தமிழ் சங்கத்திற்கான விளம்பரத்தை குறைத்து இருக்கலாம்.
சுற்று சூழல் மாசுபாடு :
ஆளுநர் அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு, சட்டமன்றம் அனுப்பிய மசோதாவை கிடப்பில் போட்டு இருக்கிறார். இது குறித்து அவர் விளக்க வேண்டும். முதலமைச்சரும், ஆளுநரும் ஈகோ இல்லாமல், மக்களுக்காக பணிபுரிய வேண்டும். தனியார் பால் விலையை குறைக்க வேண்டும். தனியார் பால் நிறுவனம் மாபியா போன்று செயல்படுகிறார்கள் மாபியாவை குறைக்க வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.