PMK: தமிழக மீனவர்கள் 8 பேரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க பா.ம.க. தலைவர் வலியுறுத்தல்!
PMK: மீனவர்களை மீட்க பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எட்டு மீனவர்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும், மத்திய அரசு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தையும், இந்த விஷயத்தை கவனித்து அவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 100 படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்!@PMOIndia @DrSJaishankar @CMOTamilnadu
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 20, 2022
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை , அவர்களின் படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்!
வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 20, 2022
ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, அவர்களின் படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்!
@SLNavyAtrocities