மேலும் அறிய

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தமா? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் ஆசிரியர்களை நியமிப்பதில் செய்யப்படும் காலதாமதத்தையும், அலட்சியத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்த செய்திகள் உண்மை தானோ ?

தமிழ்நாட்டில் நிதி நெருக்கடியால் ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாவும் மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்களை விரைவாக நியமிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இடைநிலை ஆசிரியர்கள் தொடங்கி கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் வரை அனைத்து நிலை ஆசிரியர் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களை நியமிப்பதில் செய்யப்படும் காலதாமதத்தையும், அலட்சியத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்த செய்திகள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு, நடப்பாண்டின் தொடக்கத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதமே வெளியிடப்பட்ட பிறகும் அவர்களுக்கு பணியமர்த்தல் ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை.

அரசு பள்ளிகளுக்கு 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை 21-ஆம் நாள் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான விடைக்குறிப்புகள் கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடத்தப்படவிருந்த போட்டித்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விட்டன. அந்தத் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் எந்த செய்தியும் இல்லை.

கடந்த மே மாதம் வெளியாவதாக இருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கையும், கடந்த ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையும் செப்டம்பர் மாதம் முடிவடையப் போகும் நிலையிலும் வெளியாகவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை மட்டுமே நிரப்பப்போவதாகவும், மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் நிதிநெருக்கடி ஐயத்தை உறுதி செய்கின்றன.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான முதன்மைத் தேவை கல்வி தான். தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி) 6 % செலவிட வேண்டியுள்ள நிலையில், ஒன்றரை விழுக்காட்டுக்கும் குறைவான தொகை தான் செலவிடப்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்காக ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயாவது ஒதுக்கப்பட வேண்டும். இதுவும் கூட மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் சுமார் 3% என்ற அளவில் தான் இருக்கும். முதற்கட்டமாக இந்த அளவு நிதியை ஒதுக்கீடு செய்து விட்டு, படிப்படியாக இதை அதிகரிக்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் மார்ச் மாதத்திற்குள் நிரப்பவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
Fire cracker Accident: சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Embed widget