மேலும் அறிய

Drugs Black Marketing : தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்கவேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் போதைப்பொருட் விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“ கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் பலர் கூட்டமாக அமர்ந்து போதை ஊசியை  உடலில் செலுத்திக் கொள்ளும் காணொலி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் இன்றைய இளைய தலைமுறையினரின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கவலைக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களில் சிறுவர்களும் இருப்பதாக தெரிகிறது.

கோவையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் போதைப் பழக்கம் தலைவிரித்தாடுகிறது. இது மிகவும் ஆபத்தானது.  இது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், இளைய தலைமுறையினரில் பெரும்பான்மையினரை காப்பாற்ற முடியாத நிலைமை விரைவில் உருவாகி விடும்.

Drugs Black Marketing : தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்கவேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்.எஸ்.டி. என அனைத்து வகையான போதைப் பொருட்களும் சென்னையில் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

சில விடுதிகளுக்கும், அறைகளுக்கும் தொலைபேசியில் ஆர்டர் வாங்கி  நேரடியாக கொண்டு சென்று கொடுக்கும் அளவுக்கு போதைபொருட்களை விற்பனை செய்யும் முகவர்களின் தொடர்பு வளையம் விரிவடைந்திருக்கிறது. இது தமிழகத்தின் நலன்களுக்கு நல்லதல்ல.

இதில் கவலையளிக்கும் உண்மை என்னவென்றால் போதை வழக்கத்திற்கு அடிமையாவோரில் பெரும்பான்மையினர் மாணவர்கள். வெளி மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிக எண்ணிக்கையிலும் பயின்று வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும் தான் போதைப்பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படும் பகுதிகளாக திகழ்கின்றன. இந்த உண்மை அனைத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கும் நன்றாகத் தெரியும் என்றாலும், இதையெல்லாம் தட்டிக்கேட்டால் மாணவர் சேர்க்கை குறைந்து விடுமோ? என்ற அச்சத்தில் போதைத் தீமையை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றன.

Drugs Black Marketing : தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்கவேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

போதை உச்சத்திற்கு செல்வதால் இழைக்கப்படும் வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. போதைக்கு அடிமையான இளைஞர்கள், சிறுவர்கள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். போதைக்காக நடைபெறும் மோதல்கள் பல நேரங்களில் கொலைகளில் முடிகின்றன. அந்த வகையில் போதை மருந்து பழக்கம் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாகவும் மாறி வருவதை அரசு உணர வேண்டும்.

இளைஞர்கள் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம். அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து  தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாவட்ட அளவில் தனித்தனி படைகள் அமைக்கப்பட்டு, எங்கெல்லாம் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் அதிரடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும்; போதைப் பொருட்களை விற்பனை செய்வோரை கைது கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!
SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!
Embed widget