மேலும் அறிய

Anbumani Ramadoss : ஆன்லைன் ரம்மி தடை சட்டம்.. ஆளுநர் நிறுவனங்களுக்கு சாதகமா? அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது, அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறாரோ என தோன்றுகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது, அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறாரோ என தோன்றுகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 20 இடங்களில் கட்சி கொடியேற்றம் நிகழ்விற்கு வந்த  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அன்புமணி, “காவிரி உபரிநீர் திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும், கடந்தாண்டு 685 டி எம் சி தண்ணீர் காவிரியில் வீணாக கடலிலே கலந்தது, உபரிநீரை தருமபுரி மாவட்டஏரி குளங்களை நிரப்பும் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு போரடியது பாமகதான். காவிரி உபரி நீர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கவேண்டும். வாழ்வாதார பிரச்சனையாக உள்ள இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தடை செய்ய வேண்டும் என முதன்முதலில் பாமக தான் குரல் கொடுத்தது. இதனை தடை செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில், 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை ஆளுநர் நிறைவேற்றவில்லை. இதுவரை 47 பேர் ஆன்லைன் ரம்மி விளையாடி உயிரிழந்துள்ளனர். இதனை ஆளுநர் கண்டு கொள்ளாமல் இருப்பதை பார்த்தால், அந்த நிறுவனங்களுக்கு ஆளுநர் சாதகமாக இருக்கிறார் என்று தோன்றுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பேசியது குறித்து, கொடுத்த தண்டனை என்பது  மிகப்பெரியது. ராகுல் பேசியது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் நீதிமன்றம் எச்சரித்திருக்கலாம், ஆனால் தண்டனை என்பது தவறானது. மேலும் ராகுலுக்கு தண்டனை கொடுத்த நீதிபதியே, ஒரு மாத காலம் நிறுத்தி வைத்துள்ளார். ஒருவேளை ராகுல் மேல்முறையீடு சென்று, அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால் நீக்கம் செய்திருக்கலாம். இதில் பாஜக அரசு அவசரப்படாமல் இருந்திருக்கலாம் என தெரிவித்தார்.

மக்களை நாசபடுத்தும், விவசாயத்தை நாசபடுத்தும், சுற்று சூழலை நாசபடுத்தும் என் எல் சி  திட்டம் தேவையே இல்லை..என் எல் சி இல்லையென்றால் தமிழகம் இருண்டு போய்விடாது நிலம் கொடுத்த நில உரிமையாளர்களுக்கு எந்த ஒரு பயனுமில்லை. மேலும் தமிழக வேளாண்துறை அமைச்சர் அதிகம் பேசுவதை நிறுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பேச வேண்டும் என்எல்சி மூன்றாவது நிலக்கரி திட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சரின் சொந்த கிராமமான முட்டம் கிராமமும் வருகிறது, இது அமைச்சருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை, ஏற்கனவே என் எல் சிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கே வேலை வாய்ப்புகள் வழங்கபட வில்லை, சுற்றுசூழலை அழிக்கும், விவசாயத்தை அழிக்கும் எந்த ஒரு திட்டமும் தேவையே இல்லை, ஸ்டெர்லைட் ஆகட்டும், எட்டுவழிச்சாலை திட்டமோ எதுவுமே தேவையல்லை, ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்ட்டிருக்கிறது, பாதுகாக்கபட்ட டெல்டா பகுதியில் இப்படியொரு திட்டம் தேவையில்லை. 

தருமபுரி மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பு என்பது மன வேதனையளிக்கிறது, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து யானை உயிரிழப்பிற்கு காரணமானவர்கள்.மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். மேலும்  இந்தியாவிலேயே மது விற்பனை தமிழகம்தான் அதிக விற்பனை இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகை 24 கோடி. ஆனால் அங்கு மது விற்பனை 17 ஆயிரம் கோடி. தமிழகத்தில் மது விற்பனை 45 ஆயிரம் கோடி இருந்தும், அடுத்த ஆண்டு 50,000 கோடியை இலக்காக அறிவித்திருப்பது வெட்கக்கேடு. மது விற்பனையை குறைக்கத்தான் அமைச்சராக இருக்கிறார், ஆனால் அதை அமைச்சர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என அன்புமணி  தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget