PM Modi Chennai Visit LIVE: விமான நிலையத்தில் பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை
PM Modi Chennai Visit: பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையின் அடுத்தடுத்த அப்டேட்களை கீழே விரிவாக காணலாம்.

Background
விமான நிலையத்தில் பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏப்ரல் 17ஆம் தேதி சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: மத்திய அமைச்சர் எல்.முருகன்
ஏப்ரல் 17ஆம் தேதி சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எல்.முருகன் பேசி வருகிறார்.
ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்கள்: அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடி
ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, பல்லாவரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
போட்டிபோட்டு முழக்கமிட்ட திமுக, பாஜகவினர்
பல்லாவரம் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வந்தபோது, திமுகவினர் 'பெரியார் வாழ்க' என்று முழக்கமிட்டனர். பதிலுக்கு பாஜகவினர், 'மோடி வாழ்க' என்று முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாவரம் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை விமான நிலையம் புறப்பட்ட பிரதமர் மோடி
பல்லாவரம் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி, ஐஎன்எஸ் அடையாறில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் புறப்பட்டார்.

