வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி இடமாற்றம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த பனீந்திர ரெட்டி வணிக வரித்துறை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த பனீந்திர ரெட்டி வணிக வரித்துறை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.
அதேபோல், வணிக வரித்துறை ஆணையராக இருந்த எம்.ஏ. சித்திக் வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்தது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Nilgiris district Collector : நீலகிரி புதிய மாவட்ட ஆட்சியராக அம்ரித் பொறுப்பேற்றார்
‛நான் அமைச்சர் இல்லை... வாட்ச்மேன்...’ -அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு!