Survivor Tamil GrandFinale: ஜூரோ ஓட்டு வேனசா... கமாவுக்கு புள்ளி வைத்த உமாபதி...முரண் சரண்... சாம்பியன் விஜயலட்சுமி!
விக்ராந்த், இனிகோ, நாராயணன், நந்தா ஆகியோரின் நான்கு ஓட்டுகளை பெற்று விஜயலட்சுமி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் சீசன் நேற்று நிறைவு பெற்றது. 90 நாட்கள் நடந்த கடுமையான சவால்களை கடந்து போட்டியின் இறுதியில் விஜயலட்சுமி வெற்றி பெற்று ரூ.1 கோடி பரிசை வென்றார். ஆனாலும் வழக்கமான மகிழ்வான நிகழ்வுடன் இறுதிப் போட்டி நிறைவு பெறவில்லை. கண்ணீர், சோகம், பிரிவு என வழக்கமான நாட்களைப் போன்றே இறுதிப் போட்டியும் இருந்தது. இதோ அது பற்றி...
Seri. Finals athuma FINAL-ah oru vaati aluthukuren.. 🥲🥲🥲 #SurvivorTamil #Survivor #SurvivorFinale #ZeeTamil #GrandFinale #சர்வைவர் #Kombargal #ActionKingArjun #Umapathy @umapathyramaiah pic.twitter.com/Wz9rSyNiYn
— Zee Tamil (@ZeeTamil) December 12, 2021
கிராண்ட் பினாளே வாரத்தில் இறுதியாக விஜயலட்சுமி, வேனசா, சரண், உமாபதி ஆகிய 4 பேர் களத்தில் இருந்தனர். அவர்கள் அர்ஜூன் தலைமையில் நடந்த ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு வந்தனர். சில நாட்களுக்கு முன் நடந்த இமினிட்டி சேலஞ்சில் வெற்றி பெற்ற விஜயலட்சுமி நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வானார். அது மட்டுமின்றி, இன்னொரு நபரை இறுதி போட்டிக்கு அழைத்துக்கொள்ளும் சக்தியும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் ட்ரைபிள் பஞ்சாயத்தில் அவர்கள் பங்கேற்றனர். விஜயலட்சுமிக்கு வழங்கப்பட்ட சலுகையை பயன்படுத்தி, இன்னொரு இறுதி போட்டியாளரை தேர்வு செய்யுமாறு அர்ஜூன் கூறினார். அப்போது விஜயலட்சுமி, வேனசாவை தேர்வு செய்தார். இது உமாபதிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஞ்சாயத்திற்கு வருவதற்கு முன்பு வரை தனக்கு ஓட்டளிப்பதாக கூறியிருந்த விஜயலட்சுமி, இங்கே வந்து முடிவை மாற்றியதை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.விஜயலட்சுமி தன்னிடமும் அதை தெரிவித்திருந்ததாக சரணும் கூறினார்.
ஆனால் வழக்கம் போல, அதற்கு விஜயலட்சுமி சில சப்பை கட்டுகளை கட்டினார். இதைத் தொடர்ந்த, மூன்றாவது இறுதி போட்டியாளரை தேர்வு செய்ய சரண்-உமாபதி இடையே போட்டி ஒன்று வைக்கப்பட்டது. ஆனால், விஜயலட்சுமி செய்த துரோகத்தால் தனக்கு விளையாட விருப்பமின்றி, வேண்டுமென்றே தோல்வியை தழுவினார் உமாபதி. சரண் வெற்றி பெற்று, மூன்றாவது இறுதி போட்டியாளராக விஜயலட்சுமி-வேனசா உடன் சரண் இணைந்தார். தோற்ற உமாபதி, ஜூரி மெம்பர் ஆனார்.
Seri. Finals athuma FINAL-ah oru vaati aluthukuren.. 🥲🥲🥲 #SurvivorTamil #Survivor #SurvivorFinale #ZeeTamil #GrandFinale #சர்வைவர் #Kombargal #ActionKingArjun #Umapathy @umapathyramaiah pic.twitter.com/Wz9rSyNiYn
— Zee Tamil (@ZeeTamil) December 12, 2021
அதன் பின் ஜூரி மெம்பர்கள் நந்தா, அம்ஜத், ஐஸ்வர்யா, நாராயணன், விக்ராந்த், இனிகோ பிரபாகர், உமாபதி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் ஓட்டளிக்கும் நபர், இறுதி போட்டியில் வெற்றி பெறுவார் என அர்ஜூன் அறிவித்தார். இதில் விக்ராந்த், இனிகோ, நாராயணன், நந்தா ஆகியோரின் நான்கு ஓட்டுகளை பெற்று விஜயலட்சுமி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஐஸ்வர்யா, அம்ஜத், உமாபதி ஆகிய 3 பேரில் வாக்குகளை சரண் பெற்றார். வேனசாவிற்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. இதன் மூலம் முதல் சர்வைவர் எபிசோடின் சோல் வின்னராக விஜயலட்சுமி தேர்வானார். அவருக்கு பரிசுத்தொகை ரூ.1 கோடியை அர்ஜூன் வழங்கினார். சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Bang Bang Bangggggggg.... 💥
— Zee Tamil (@ZeeTamil) December 12, 2021
Annndddd The Winner is @vgyalakshmi ...👑🥳 . The Supermom becomes the sole Survivor... #SurvivorTamil #Survivor #SurvivorFinale #ZeeTamil #GrandFinale #சர்வைவர் #Kombargal #ActionKingArjun #Vijayalakshmi pic.twitter.com/0w6UulWHpS
இந்த போட்டியில், எப்படியாவது ஐஸ்வர்யாவை தோற்கடிக்க வேண்டும் என்றும், கொம்பர்களாக இணைந்தாலும் கூட காடர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என கடைசி வரை விறுவிறுப்பாக வேனசாவுக்கு ஒரு ஓட்டு கூட போடாமல், அவர் நம்பி காடர்கள் அணி சரியான பாடத்தை புகட்டி, இது எல்லாம் ஒரு கேம் என்பதை நினைவூட்டிவிட்டனர். அதே போல, தனக்கு சப்போர்ட் செய்த ஒரே காரணத்திற்காக ஓரங்கட்டப்பட்ட ஐஸ்வர்யாவை, தன்னை ஒதுக்கியவர்களுடன் சேர்ந்து ஓட்டளித்து வெளியேற்றிய சரணுக்கு, அனைத்தையும் மறந்து ஐஸ்வர்யா ஓட்டளித்தார். விஜயலட்சுமி செய்த துரோகத்தால் மனமுடைந்திருந்த உமாபதி, தனது வாக்கை சரணுக்கு போட்டார். அதே நேரத்தில் உமாபதியை வெளியேற காரணமாக இருந்த விஜயலட்சுமிக்கு விக்ராந்த் மற்றும் இனிகோ ஆகியோர் ஓட்டளித்தனர். இப்படி பல்வேறு முரண்பாடுகளை கடந்து, ஒருவழியாக முடிவு பெற்றது சர்வைவர்!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்