மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
மாணவர் முதுகுளத்தூர் மணிகண்டன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
’’2 உடற்கூராய்வு அறிக்கையிலும், மணிகண்டன் விஷம் அருந்தி உயரிழந்தார் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் உடலில் உள் காயங்கள் ஏதும் இல்லை. எனவே, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்’’
ராமநாதபுரம் மாவட்டம் ஆனைசேரியைச் சேர்ந்த ராமலெட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் மாற்றுத்திறனாளி. நான்கு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் மணிகண்டன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியில் இளநிலை படிப்பு பயின்று வந்தார். கடந்த 4ஆம் தேதி மணிகண்டன் அவரது நண்பர்களோடு சேர்ந்து உரங்களை வாங்குவதற்காக சென்ற நிலையில், கீழத்தூவல் காளி கோவில் அருகே காவலர்கள் லட்சுமணன் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
மணிகண்டன் வாகனத்தை நிறுத்தாமல் செல்லவே, அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு வந்து மகனை அழைத்துச் செல்லுமாறு காவல் நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர்கள் லட்சுமி மற்றும் கற்பகம் ஆகியோர் மணிகண்டனை விரைவாக அழைத்துச் செல்லுமாறு அவசரப்படுத்தினார். அதோடு எனது மகனை புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
மகனை வீட்டிற்கு அழைத்து சென்ற போது உடல் முழுவதும் வலியாக இருப்பதாகவும், காவல்துறையினர் பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்தார். மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக மகனிடம் தெரிவித்திருந்த நிலையில், அதிகாலை 1.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்விற்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எனது மகனின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. காவல்துறையினர் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதே மகனின் இறப்பிற்கு காரணம். மகனின் உடலை மறுஉடற்கூறு ஆய்வு செய்யும் பட்சத்திலேயே இறப்பிற்கான காரணம் தெரியவரும். ஆகவே மகனின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்யவும், முதுநிலை காவல்துறையினர் மூலம் இந்த வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது.கடந்த மாதமே மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு. 2 உடற்கூராய்வு அறிக்கையிலும், மணிகண்டன் விஷம் அருந்தி உயரிழந்தார் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் உடலில் உள் காயங்கள் ஏதும் இல்லை. எனவே, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மணப்பெண்ணை அடித்ததால் நின்று போன திருமணம் - 7 லட்சம் இழப்பீடு கேட்டு மணமகன் போலீசில் புகார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion