O Panneerselvam: ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட்டில் மனு: ரூ.500 கோடி மண் எடுத்ததாக புகார்!
ஊழல் கண்காணிப்பு ஆணைய ஒப்புதலுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளித்தது.
அரசு நிலத்தில் அனுமதியின்றி 500 கோடி ரூபாய் மதிப்பில் கிராவல் மண் எடுத்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேனியைச் சேர்ந்த ஞானராஜன் ஓ.பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் அன்னபிரகாசம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியுள்ளார். ஊழல் கண்காணிப்பு ஆணைய ஒப்புதலுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளித்தது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் படிக்க: Vanniyar Reservation: வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீடு - மனுவில் இருப்பது என்ன?
#JUSTIN | ஓ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குhttps://t.co/wupaoCQKa2 | #opanneerselvam | #AIAMDK | #MadrasHighCourt pic.twitter.com/Y5ZSKNeACV
— ABP Nadu (@abpnadu) November 17, 2021
அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முறைகேடு நடந்துள்ளதாகவும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க: Ex Minister Saroja: உயர்நீதிமன்றம் போகப்போறோம் - முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்ற சரோஜா!
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் 217 பக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் படிக்க: Surya Jaibhim | நிஜ செங்கேணி ’பார்வதி அம்மாளுக்கு’ செய்த மரியாதை.. அடுத்தடுத்து அதிரடி செய்யும் சூர்யா...
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்