மேலும் அறிய

மாந்தோப்பில் மறைந்திருந்த 1,000 ஆண்டு கால அதிசயம்: செஞ்சி அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை!

விழுப்புரம் அருகே 1,000 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருங்காப்பூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் கள ஆய்வில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை (துர்க்கை) சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருங்காப்பூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் கள ஆய்வில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த அரிய கொற்றவை (துர்க்கை) சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் அப்பகுதியின் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

புதர்களுக்கு இடையே கண்டெடுப்பு:

செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் சுதாகர் தலைமையில், ஆய்வு மாணவர்கள் முகில் மற்றும் ஈசாக் ஆகியோர் பெருங்காப்பூர் பகுதியில் தீவிர கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள மலை அடிவாரத்தில் அமைந்திருந்த மாந்தோப்பில் புதர்களுக்கு இடையே மறைந்த நிலையில் இந்த அரிய கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.

சிற்பத்தின் அமைப்பும் கலைநயமும்:

சுமார் 5 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பாறையில் இந்தச் சிற்பம் மிகவும் கம்பீரமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் காட்சிதரும் கொற்றவை, எருமைத் தலையின் மீது கம்பீரமாக நின்ற நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் கட்டமைப்பு, வடிவம் மற்றும் கலைநயத்தை வைத்து பார்க்கும்போது, இது கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கலை பாணியைப் பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றுச் சான்று:

இதுகுறித்து பேராசிரியர் சுதாகர் கூறுகையில், "பழங்கால தொண்டை மண்டலப் பகுதிகளில் கொற்றவை வழிபாடு மிகவும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. பெருங்காப்பூர் மலை அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பத்தின் மூலம், இப்பகுதியில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலேயே கொற்றவை வழிபாடு தழைத்தோங்கியிருந்ததும், பல்லவர்களின் கலைப் பங்களிப்பு மற்றும் ஆட்சி அதிகாரத்தின் தாக்கம் இப்பகுதியில் பரவியிருந்ததும் தெளிவாகத் தெரியவருகிறது" எனக் குறிப்பிட்டார்.

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பெருங்காப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொல்லியல் துறையினர் தொடர்ந்து தீவிர ஆய்வுகள் மேற்கொண்டால், மேலும் பல அரிய வரலாற்றுச் சான்றுகளும் பண்பாட்டு எச்சங்களும் வெளிவர வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மாந்தோப்பில் மறைந்திருந்த 1,000 ஆண்டு கால அதிசயம்: செஞ்சி அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை!
மாந்தோப்பில் மறைந்திருந்த 1,000 ஆண்டு கால அதிசயம்: செஞ்சி அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Embed widget