மேலும் அறிய

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

திடீர் நெஞ்சு வலி காரணமாக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள், பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இயக்குனார்களாக கொண்ட பூட்டர் ஃபவுண்டேஷன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்க சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுவதுடன், பல்கலைக்கழக வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

அதில், பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சரிவர இயங்கவில்லை. சிண்டிகேட் அனுமதி இல்லாமல் துணைவேந்தர் சமீபத்தில் தொடங்கிய நிறுவனத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதியை முதலீடு செய்துள்ளார். இதனால் பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது சாதி ரீதியாகவும், ஆபாசமாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் மாலை பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுதல், கூட்டு சரி செய்தல், மோசடி செய்தல், ஆவணங்களை போலியாக தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய எட்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதனை கைது செய்த கருப்பூர் காவல்துறையினர் அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் இரவு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிக்கு சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் வீட்டில் ஆச்சர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜெகநாதன் சொந்த ஜாமின் கோரி உள்ளார். அதன் பேரில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் ஏழு நாட்கள் சேலம் மாநகர் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் அடிப்படையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று அதிகாலை நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு வரை நடந்த சோதனை இரண்டாம் நாளாக இன்று அதிகாலை முதல் காவல்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தருக்கு தொடர்புடைய துறைவேந்தர் இல்லம், துணைவேந்தர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சேலம் மாநகர காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திடீர் நெஞ்சு வலி காரணமாக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெகன்நாதனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
Top 10 News Headlines: மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
Top 10 News Headlines: மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
Gold Rate Peaks: அடங்கப்பா.. மறுபடியும் வேலைய காட்டிட்டியே.! புதிய உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன.?
அடங்கப்பா.. மறுபடியும் வேலைய காட்டிட்டியே.! புதிய உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன.?
BCCI: ஒதுக்குனது போதும், திருந்திய பிசிசிஐ.. இனி எல்லா போட்டிகளிலும் இருப்பார், அடிச்ச அடி அப்படி..
BCCI: ஒதுக்குனது போதும், திருந்திய பிசிசிஐ.. இனி எல்லா போட்டிகளிலும் இருப்பார், அடிச்ச அடி அப்படி..
Tamilnadu Roundup: இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
USA Tariff:
USA Tariff: "இப்போதைக்கு ஒன்னும் பேச வேண்டாம்" மோடியின் டார்கெட்டிற்கு ரெட் கார்ட், டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Embed widget